- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இந்த காரணத்தால் சஞ்சு சாம்சனோட வாய்ப்பை ரியான் பராக் பறிச்சுட்டாரு.. இர்பான் பதான் கருத்து

இலங்கைக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. அதில் இதுவரை நடைபெற்ற 2 போட்டிகளிலும் இந்தியா அடுத்தடுத்த வெற்றிகளை பெற்றுள்ளது. அதனால் 2 – 0* (3) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே கோப்பையை வென்றுள்ள இந்தியா புதிய கேப்டன் சூரியகுமார் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தலைமையில் தங்களது பயணத்தை வெற்றிகரமாக துவங்கியது.

முன்னதாக இந்தத் தொடரில் சஞ்சு சாம்சனுக்கு முதல் போட்டியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. அவருக்கு பதிலாக ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பராக வாய்ப்பு பெற்றுள்ளார். அதே போல பேட்டிங்கில் அவருக்கு பதிலாக ஜிம்பாப்வே தொடரில் அறிமுகமான ரியான் பராக்கிற்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அந்த நிலையில் 2வது போட்டியில் காயமடைந்த சுப்மன் கில்லுக்கு பதிலாக அவர் துவக்க வீரராக களமிறங்கினார்.

- Advertisement -

ரொம்ப கஷ்டம்:
ஆனால் அந்த வாய்ப்பில் கோல்டன் டக் அவுட்டான அவர் தமக்கு ஆதரவளிக்கும் ரசிகர்களுக்கு மீண்டும் ஏமாற்றத்தை கொடுத்தார். ஏனெனில் காலம் காலமாக சஞ்சு சாம்சனுக்கு இந்திய அணியில் தொடர்ச்சியாக வாய்ப்பு கொடுப்பதில்லை. அதனால் அவருக்கு நிறைய ரசிகர்கள் வரிந்துக் கட்டிக்கொண்டு ஆதரவளிப்பது வழக்கமாகும். ஆனால் பல நேரங்களில் முக்கியமான சமயத்தில் தமக்கு கிடைக்கும் வாய்ப்பை சஞ்சு சாம்சனும் சரியாக பயன்படுத்திக் கொள்வதில்லை.

அதனாலேயே இந்திய அணி நிர்வாகமும் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகளை கொடுக்க யோசிக்கிறது என்றே சொல்லலாம். மறுபுறம் முதல் போட்டியில் கடைசி நேரத்தில் 3 விக்கெட்டுகளை எடுத்து அசத்திய ரியான் பராக் 2வது போட்டியிலும் முழுமையாக 4 ஓவர்கள் வீசினார். இந்நிலையில் பந்து வீசுவதன் காரணமாக ரியான் பராக் நிறைய வாய்ப்புகளை பெறுவதாக இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

எனவே அணி நிர்வாகம் இனிமேல் அவருக்குத் தான் அதிக வாய்ப்பு கொடுக்கும் என்றும் இர்பான் பதான் கூறியுள்ளார். அதனால் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைப்பது கடினம் என்று மறைமுகமாக தெரிவிக்கும் அவர் இது பற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “தன்னுடைய பந்து வீசும் திறன் காரணமாக ரியான் பராக் நிறைய வாய்ப்பு பெறுவதை நீங்கள் பார்ப்பீர்கள்”

இதையும் படிங்க: டிஎன்பிஎல் 2024 : அஸ்வினுக்கே விபூதி அடிக்கப் பார்த்த தமிழக வீரர்.. பிளே ஆஃப் சுற்று அட்டவணை இதோ

“பல நாடுகளைச் சேர்ந்த அணிகளில் அவரைப் போன்ற டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் இப்படி பந்து வீசும் திறனை பெற்றிருக்கவில்லை. இங்கே தான் ரியான் பராக் எக்ஸ்ட்ரா சாதகத்தை பெறுகிறார். அது மிகவும் சரியானது” என்று கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து இத்தொடரின் 3வது போட்டி ஜூலை 30ஆம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -