
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு எதிராக இந்தியா 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. அத்தொடரின் முதல் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில் 2வது போட்டியில் ஆஸ்திரேலியா வென்றது. அப்போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 125 ரன்கள் மட்டுமே எடுத்தது தோல்விக்கு காரணமானது. அதற்கு பயிற்சியாளர் கௌதம் கம்பீர் சோதனை என்ற பெயரில் பேட்டிங் வரிசையை தாறுமாறாக மாற்றியது முக்கிய காரணமானது.
குறிப்பாக சுப்மன் கில் ஓப்பனிங்கில் விளையாடுவதால் சுப்மன் கில் மிடில் ஆர்டரில் விளையாட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்ட சஞ்சு சாம்சன் 2025 ஆசியக் கோப்பையில் ஓரளவு அசத்தினார். அப்படிப்பட்டவரை திடீரென 3வது இடத்தில் களமிறக்கிய கம்பீர் ஆல் ரவுண்டரான சிவம் துபேவுக்கு முன் ஹர்ஷித் ராணாவை களமிறக்கியது ரசிகர்களை கடுப்பேற்றியது. இந்நிலையில் பேட்டிங் வரிசையை இப்படி தாறுமாறாக மாற்றினால் இந்தியா வெற்றி பெற வாய்ப்பில்லை என்றும் முன்னாள் வீரர் இர்பான் பதான் விமர்சித்துள்ளார்.
ஓப்பனிங்கில் நன்றாக விளையாடிக் கொண்டிருந்த சஞ்சு சாம்சன் மிடில் ஆர்டரில் கிடைத்த வாய்ப்பில் அசத்தத் துவங்கினார். அப்படிப்பட்ட நிலையில் திடீரென மீண்டும் அவரை 3வது இடத்தில் விளையாட வைத்தால் எப்படி அசத்துவார்? என்று பதான் விமர்சித்துள்ளார். சமீப காலமாகவே சாம்சனை வெவ்வேறு பேட்டிங் இடங்களில் அலைய வைப்பது பற்றி பதான் பேசியது பின்வருமாறு.
“சஞ்சு சாம்சனை இப்படி பேட்டிங் ஆர்டரில் கீழேயும் மேலேயும விளையாட வைப்பது எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எனக்குத் தெரியவில்லை. டி20 கிரிக்கெட்டில் ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் தவிர யாரும் நிலையானவர்கள் கிடையாது என்பது எனக்குத் தெரியும். அதற்காக நெகிழ்வுத்தன்மை என்ற பெயரில் நீங்கள் அதிக மீள்தன்மையுடன் இருக்கக்கூடாது”
“அப்படி செய்தால் நீங்கள் வெவ்வேறு வேலைகளுக்கான நிலைத்தன்மையை நீங்கள் இழப்பீர்கள். எனவே இந்தியா அதற்கு கவனத்தைக் கொடுக்க வேண்டும். நீங்கள் அடிக்கடி வீரர்களின் வேலையை மாற்றும் போது மற்ற விஷயங்கள் இயற்கையாகவே மாறிவிடும். ஆசியக் கோப்பையில் சாம்சன் மிடில் ஆடரில் பழைய பந்தை எதிர்கொண்டதும் ஓப்பனிங்கில் புதிய பந்தை எதிர்கொண்டு 3 சதங்கள் அடித்ததும் வித்தியாசமானது”
இதையும் படிங்க: டிரைவர் சமையல்காரராக முடியாது கம்பீர்.. ராணாவையும் இசைநாற்காலி தப்பையும் தூக்கி போடுங்க.. ரமேஷ்
“அதற்கு வித்தியாசமான மனநிலை மற்றும் பலம் தேவைப்படும். கூடவே அணியின் ஆதரவும் தேவைப்படும். அதே சமயம் சாம்சனுக்கு அணி நிர்வாகம் ஆதரவு கொடுக்கிறது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் நீங்கள் 3 – 4 போட்டிகளில் தொடர்ந்து சொதப்பினால் அந்த ஆதரவு விரைவாக மறைந்து விடும். அது சாம்சன் விஷயத்தில் நடக்காது என்று நம்புகிறேன்” எனக் கூறினார்.