கிரிக்கெட் கொடுத்த 2வது வாய்ப்பை நாயர் அங்கேயே விட்டாரு.. சுதர்சன் வேற மாதிரி அசத்திருப்பாரு.. பதான் பேட்டி

Irfan Pathan
- Advertisement -

இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 2 – 2 என்ற கணக்கில் இந்திய அணி சமன் செய்தது. அதிலும் கடைசிப் போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா மிராக்கள் வெற்றி பெற்றது ரசிகர்களால் மறக்க முடியாததாக அமைந்தது. முன்னதாக அத்தொடரில் பெரும்பாலான இந்திய வீரர்கள் சிறப்பாக விளையாடினார்கள் என்றே சொல்லலாம்.

ஆனால் 8 வருடங்கள் கழித்து கம்பேக் கொடுத்த கருண் நாயர் ஒரே ஒரு அரை சதத்தை மட்டுமே அடுத்து ஏமாற்றத்தைக் கொடுத்தார். இத்தனைக்கும் உள்ளூர் மற்றும் கவுண்ட்டி தொடரில் அபாரமாக விளையாடிய அவர் இங்கிலாந்து லைன்ஸ் அணிக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் இரட்டை சதத்தை அடித்தார். இருப்பினும் முதன்மைப் போட்டிகளில் தடுமாற்றமாக விளையாடிய அவர் பெரிய ரன்கள் குவிக்கவில்லை.

- Advertisement -

10க்கு 4 மதிப்பெண்:

அதனால் “எனக்கு 2வது வாய்ப்பை கொடு” என்று கிரிக்கெட்டிடம் கேட்ட அவர் அந்த வாய்ப்பில் அசத்தவில்லை என்பதே நிதர்சனமாகும். இந்நிலையில் லார்ட்ஸ் போட்டியில் 193 ரன்களை துரத்திய இந்தியாவை கருண் நாயர் வெற்றி பெற வைப்பதற்கு அற்புதமான வாய்ப்பு கிடைத்ததாக இர்பான் பதான் கூறியுள்ளார். ஆனால் 4வது நாள் மாலையில் பந்தை தவறாக படித்த நாயர் விக்கெட்டை இழந்தது இந்தியாவின் தோல்விக்கு வித்திட்டது.

அங்கேயே கிரிக்கெட் கொடுத்த 2வது வாய்ப்பை நாயர் தவற விட்டதாக பதான் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “கருண் தொடர் முழுவதும் மோசமாக பேட்டிங் செய்ததாக தெரியவில்லை. தொடர்ச்சியாக நல்ல துவக்கத்தைப் பெற்ற அவர் ஒரு அரை சதம் மட்டுமே அடித்தார்”

- Advertisement -

சுதர்சன் அசத்துவாரு:

“அவருக்கு நிறைய வாய்ப்புகள் வழங்கப்பட்டது. கிரிக்கெட்டும் அவருக்கு 2வது வாய்ப்பு கொடுத்தது. ஆனால் அதை அவர் பயன்படுத்திக் கொள்ளவில்லை. குறிப்பாக லார்ட்ஸ் போட்டியில் அவருக்கு இந்தியாவை வெற்றி பெற வைக்க பொன்னான வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அதை அவர் செய்யவில்லை. எனவே அவருக்கு 10க்கு 4 மதிப்பெண்கள் மட்டுமே தருவேன்”

இதையும் படிங்க: ஆசிய கோப்பை 2025: இந்தியா – பாகிஸ்தான் மோதல் எப்போது? அட்டவணை, எந்த சேனலில் பார்க்கலாம்

“நல்ல துவக்கத்தைப் பெற்ற அவர் திடீரென மோசமான ஷாட்டை அடித்து விக்கெட்டை கொடுத்தார். திறமையான சாய் சுதர்சன் சில விஷயங்களில் வேலை செய்தால் பெரிய ஸ்கோர் அடிப்பார். அவருக்கு போதுமான வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. ஒருவேளை அனைத்து போட்டியிலும் சுதர்சன் விளையாடியிருந்தால் விஷயங்கள் வேறு மாதிரி இருந்திருக்கும். அறிமுகப் போட்டியுடன் நீக்கப்பட்டு மீண்டும் விளையாடிய அவர் தொடர்ச்சியாக வாய்ப்பைப் பெற்றால் அசத்துவார் என்று நான் கருதுகிறேன். கடைசிப் போட்டியில் அரை சதத்தை அடித்த அவருக்கு 5 மதிப்பெண் கொடுப்பேன்” என்று கூறினார்.

Advertisement