- Advertisement -
இந்திய கிரிக்கெட்

5 வருஷம் ஒரே மாதிரி சொதப்புனா எப்படி.. ஆதரவளித்த தாமே கோலியை விமர்சித்தது ஏன்? பதான் விளக்கம்

இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி நவீன கிரிக்கெட்டில் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக போற்றப்படுகிறார். 27000க்கும் மேற்பட்ட ரன்கள் அடித்துள்ள அவர் 82 சதங்கள் அடித்து இந்தியாவின் நிறைய வெற்றிகளில் பங்காற்றியுள்ளார். இருப்பினும் சமீப காலங்களாகவே அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் தடுமாற்றமாக விளையாடி வந்தார்.

குறிப்பாக கடந்த நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா தொடரில் அவருடைய சுமாரான பேட்டிங் இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமானது. அதிலும் குறிப்பாக ஆஸ்திரேலியாவில் நடந்த முதல் போட்டியிலேயே சதத்தை அடித்த அவர் தொடர்ந்து அசத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கடுத்த 4 போட்டிகளிலும் அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப் பந்துகளில் அவர் தொடர்ச்சியாக தனது விக்கெட்டை இழந்தது இந்திய ரசிகர்களையே கோபமடைய வைத்தது.

- Advertisement -

ஆதரவளித்த பதான்:

இத்தனைக்கும் சச்சின் போல அவுட் சைட் பந்துகளை அடிக்காமல் விட்டு சதத்தை அடியுங்கள் என்று ஆடம் கில்கிறிஸ்ட் போன்ற ஜாம்பவான்கள் அவரை அறிவுறுத்தினார்கள். ஆனால் கடைசி வரை அதை செய்யாத விராட் கோலி ஒரே மாதிரியாக அவுட்டானார். அதனால் பலரும் விமர்சித்ததை தொடர்ந்து பிசிசிஐ அவரையும் ரோஹித்தையும் கழற்றி விட முடிவெடுத்தது. அதற்கு முன்பாக அவர்களாகவே அடுத்தடுத்து ஓய்வு பெற்றார்கள்.

இந்நிலையில் 2019க்குப்பின் சதமடிக்க முடியாமல் தடுமாறிய போது விராட் கோலிக்கு தாம் ஆதரவளித்ததாக முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் தெரிவித்துள்ளார். ஆனால் 2021க்குப்பின் 5 வருடங்கள் ஒரே மாதிரியாக விராட் கோலி அவுட்டானதாலயே கடைசியில் விமர்சித்ததாகவும் பதான் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “விராட் கோலி 2019 – 2020 காலகட்டங்களில் வீழ்ச்சியை சந்தித்திருந்தார்”

- Advertisement -

கோலியை விமர்சித்தது ஏன்:

“அப்போது என்னுடைய சமூக வலைதளத்தை நீங்கள் பாருங்கள். அதில் நான் விராட் கோலிக்கு நிறைய ஆதரவு கொடுத்திருப்பேன். ஏனெனில் ஒரு பெரிய வீரர் தடுமாறும் போது ஆதரவு கொடுக்கப்பட வேண்டும். இந்தியாவுக்காக நிறையப் போட்டிகளை வென்று கொடுத்ததால் அவர் ஆதரவுக்கு தகுதியானவர். ஆனால் அந்த வீழ்ச்சி 5 வருடங்களாக தொடர்வது சரியல்ல”

இதையும் படிங்க: ஆசிய கோப்பைக்கு கேப்டனாக திரும்பும் சூரியகுமார் யாதவ்.. இந்திய அணி அறிவிப்பு எப்போது? – விவரம் இதோ

“ஏனெனில் உங்களுடைய அணி மிகவும் முக்கியம். ஒரு பேட்ஸ்மேன் தொடர்ந்து ஒரே மாதிரியாக அவுட்டானால், எதிரணி பி திட்டத்தை பின்பற்றாமல் ஏ திட்டத்தை வைத்தே உங்களை அவுட்டாக்குவார்கள். உண்மையில் நீங்கள் சாம்பியன் என்றால் எதிரணியை பிளான் ஏ’விலிருந்து பிளான் பி’யை பின்பற்ற வைக்க வேண்டும். ஆனால் விராட் கோலி தொடர்ந்து ஒரே மாதிரியாக அவுட்டானதே பிரச்சனையானது. அதற்காக அவர் மோசமான பிளேயர் கிடையாது, சிறந்த பிளேயர். இருப்பினும் நடந்த விஷயங்கள் உண்மை. அதையே நாங்கள் விரிவாகச் சொன்னோம்” என்று கூறினார்.

- Advertisement -