சச்சின் சேவாக் இருவரும் டக் அவுட். பொளந்து கட்டிய ஆல்ரவுண்டர். அசத்தல் வெற்றி பெற்ற இந்தியா லெஜண்ட்ஸ் – விவரம் இதோ

Yuvi-1
- Advertisement -

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுக்காண உலக சீரியஸ் தற்போது மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியில் இந்தியா லெஜன்ட்ஸ் மற்றும் இலங்கை லெஜன்ட்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பீல்டிங் செய்ய தீர்மானித்தது.

sachin

- Advertisement -

முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள் குவித்தது. அந்த அணியின் எந்த ஒரு வீரரும் 25 ரன்னை தாண்டவில்லை. இந்தியாவின் சார்பில் முனாப் படேல் 4 விக்கெட் வீழ்த்தினார். பின்னர் 139 என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

துவக்க வீரர்களாக களமிறங்கிய சச்சின் டெண்டுல்கர் டக் அவுட் ஆகி வெளியேறினார். மற்றொரு துவக்க வீரரான சேவாக்கும் ரன்கள் எதுவும் எடுக்காத நிலையில் ரன் அவுட் ஆகி வெளியேறினார். இதனால் இந்திய அணி தோற்றுவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில் அதற்கு அடுத்து வந்த யுவராஜ் சிங்கும் ரன் சேர்க்கவில்லை.

yuvi

பின்னர் வந்த முஹம்மது கைப் சற்று பொறுமையாக களத்தில் நின்று 46 ரன்கள் சேர்த்தார். அதன்பிறகு இறுதி 3 ஓவர்களில் பரபரப்பு தொற்றி கொண்டது.நிச்சயம் இலங்கை அணிதான் வெற்றிபெறும் என்று சொல்லுமளவிற்கு ஆட்டம் அவர்களின் பக்கம் சென்றது.

- Advertisement -

ஆனால் அப்போதுதான் ஈர்பான் பதான் அதிசயத்தை நிகழ்த்தினார். இறுதி 3 ஓவர்களில் தான் சந்தித்த பந்துகளை எல்லாம் பவுண்டரிகளும், சிக்ஸருமாக பறக்கவிட்டார். அதிரடியாக விளையாடி 31 பந்துகளில் 57 ரன்கள் விளாசினார். இதில் 3 சிக்சர்கள் 6 பவுண்டரிகளும் அடங்கும் இதனால் இந்திய லெஜன்ட்ஸ் அணி அபாரமாக வெற்றி பெற்றது.

Irfan

கிட்டத்தட்ட போட்டி முடிந்தது என்று எதிர்பார்த்த நிலையில் தனி ஆளாக நின்று இந்திய அணிக்கு வெற்றியை தேடித்தந்த இர்பான் பதானை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Advertisement