சூப்பர்நோவா கேலக்சி மாதிரி எப்போவும் ஜொலிப்பாரு.. தோனி – ருதுராஜ் பற்றி இர்பான் பதான் உருக்கமான பதிவு

- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடருக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் துவங்கும் இந்த வருடத்தின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. ஆனால் அந்த போட்டியில் சிஎஸ்கே அணியின் கேப்டனாக எம்எஸ் தோனி செயல்பட மாட்டார் என்பது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளது.

ஏனெனில் வருங்காலத்தை கருத்தில் கொண்டு தோனி தம்முடைய கேப்டன்ஷிப் பதவியை இளம் வீரர் ருதுராஜ் கைக்வாட் கையில் ஒப்படைத்துள்ளதாக சிஎஸ்கே நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கடந்த 2008 முதல் சென்னை அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ஐபிஎல் வரலாற்றில் அதிக வெற்றிகளை (133) பதிவு செய்த கேப்டனாக சாதனை படைத்துள்ளார்.

- Advertisement -

சூப்பர்நோவா தோனி:
அத்துடன் கடந்த வருடம் முழங்கால் வலியையும் தாண்டி சிறப்பாக கேப்டன்ஷிப் செய்த அவர் 5வது கோப்பையை வென்று வெற்றிகரமான கேப்டன் என்ற ரோகித் சர்மாவின் சாதனையை சமன் செய்தார். அது போக தோனி தலைமையில் 14 சீசன்களில் 12 முறை பிளே ஆப் சுற்றுக்கு சென்று 10 முறை ஃபைனலுக்கு தகுதி பெற்ற சென்னை 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணி என்ற மும்பையின் சாதனையை சமன் செய்துள்ளது.

மேலும் 2010, 2014 ஆகிய வருடங்களில் சாம்பியன்ஸ் லீக் டி20 கோப்பைகளையும் சிஎஸ்கே அணிக்காக வென்றுள்ள தோனி காலத்தால் அழிக்க முடியாத மகத்தான கேப்டனாக விடை பெற்றுள்ளார். இந்நிலையில் விண்மீன் மண்டலத்தில் எப்போதும் பிரகாசமாக ஜொலிக்கக் கூடிய சூப்பர் நோவா போல எம்எஸ் தோனியின் கேப்டன்ஷிப் தசாப்தங்கள் கடந்தும் பேசப்படும் என்று இர்பான் பதான் உருக்கமாக பாராட்டியுள்ளார்.

- Advertisement -

அத்துடன் புதிய கேப்டனாக பொறுப்பேற்றுள்ள ருதுராஜ்க்கு வாழ்த்து தெரிவிக்கும் அவர் இது பற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “கிரிக்கெட்டின் எப்போதும் விரிவடைந்து வரும் விண்மீன் மண்டலத்தில் சிஎஸ்கே அணியின் கேப்டனாக எம்எஸ் தோனியின் மரபு இணையற்ற புத்திசாலித்தனம் மற்றும் கவர்ச்சியின் ஒளியைக் கொண்ட ஒரு சூப்பர்நோவா போல பிரகாசமாக பிரகாசிக்கிறது. அவருடைய கேப்டன்ஷிப் பல தசாப்தங்கள் கடந்தும் நினைவு கூறப்படும்”

இதையும் படிங்க: கெஸ்ட்டாக வரும் சச்சின்.. கம்பேக் கொடுக்கும் சித்து.. தமிழில் கோபிநாத்.. ஐபிஎல் 2024 வர்ணனையாளர்கள் லிஸ்ட் 

“சிஎஸ்கே கேப்டனாக உங்கள் புதிய பொறுப்புக்கு வாழ்த்துக்கள் ருதுராஜ்” என்று பதிவிட்டுள்ளார். அதே போல இனிமேல் தோனியை கேப்டனாக பார்க்க முடியாது என்பதை நினைத்து சிஎஸ்கே ரசிகர்களும் சமூக வலைதளங்களில் ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர். இருப்பினும் காலத்திற்கும் விளையாட முடியாது என்பதை உணர்ந்து தோனி எடுத்துள்ள இந்த முடிவை அனைவருமே மதிக்கின்றனர் என்றால் மிகையாகாது.

Advertisement