இர்பான் பதான் மட்டும் தான் இந்த சாதனையை வைத்திருக்கிறார் – உங்களுக்கு தெரியுமா ?

Pathan-3

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களில் ஒருவரான இர்பான் பதான் இந்திய அணிக்காக கடந்த 2003 ஆம் ஆண்டு டிசம்பர் 12ஆம் தேதி ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அறிமுகமானார் . அதன்பின்னர் பல ஆண்டுகளாக இந்திய அணிக்காக விளையாடி உள்ள இர்பான் பதான் 120 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 173 விக்கெட்டுகளையும், 29 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 100 விக்கெட்டுகளையும் வீழ்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Pathan

மேலும் 24 டி20 போட்டிகளில் அவர் இந்திய அணிக்காக விளையாடி உள்ளார். இந்நிலையில் தற்போது நேற்று அவர் அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தனது ஓய்வை முடிவை அறிவித்தார். அதனைத்தொடர்ந்து அவரது ரசிகர்களும் முன்னாள் கிரிக்கெட் பிரபலங்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இர்பான் பதான் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி வருகின்றன. மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை துவக்க முதல் ஓவரில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய ஒரே வீரர் என்ற சாதனையை இர்பான் பதான் தன்வசம் வைத்துள்ளது அனைவருக்கும் தெரிந்த விடயம் தான். ஆனால் ஒரு சிறந்த ஆல்ரவுண்டர் ஆக விளங்கிய இர்பான் பதான் இந்திய அணிக்காக டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டிலும் இரண்டு வடிவத்திலும் துவக்க வீரராக களமிறங்கியுள்ளார்.

pathan 2

மேலும் துவக்க ஓவரையும் வீசி, ஓப்பனிங் பேட்டிங்கும் பதான் செய்துள்ளார். இது ஒரு அரிதான சாதனை ஆகும் ஏனெனில் கிரிக்கெட்டில் சில வீரர்கள் மட்டுமே பந்துவீச்சில் முதல் ஓவரையும் பேட்டிங்கில் துவக்க வீரராக களமிறங்கி உள்ளனர். ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வீரரான வாட்சன் இந்த சாதனையை செய்துள்ளார். இந்திய அணியை பொறுத்தவரை இர்பான் பதான் மட்டுமே இந்த சாதனையை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -