மீண்டும் கிரிக்கெட் விளையாடப்போகும் இர்பான் பதான். எந்த அணிக்காக தெரியமா ? – விவரம் இதோ

Irfan-1
- Advertisement -

உலகம் முழுவதும் ஐபிஎல் தொடரை போன்று பல்வேறு தொடர்கள் விளையாடப்பட்டு வருகின்றன. வங்கதேச பிரிமியர் லீக், கரிபியன் பிரீமியர் லீக், கனட பிரிமியர் லீக், பாகிஸ்தான் சூப்பர் லீக், பிக்பேஷ் என அனைத்து தொடர்களும் ஐபிஎல் தொடரை மையப்படுத்திதான் விளையாடிக் கொண்டிருக்கின்றன. இலங்கையிலும் இதுபோன்ற ஒரு தொடர் நடக்க உள்ளது.

- Advertisement -

ஆனால் போதிய நிதி இல்லாததாலும் ஸ்பான்சர்கள் இல்லாததாலும் அப்படியே இந்த தொடர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் கைவிடப்பட்டது. மீண்டும் இந்த தொடர் தற்போது துவங்க இருக்கின்றது. இலங்கை பிரீமியர் லீக் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த தொடர் ஐபிஎல் தொடரை போன்று நடத்தப்பட இருக்கிறது. வரும் நவம்பர் 21 ஆம் தேதி முதல் இலங்கையில் இந்த தொடர் நடக்க இருக்கிறது.

இதில் இந்தியாவின் முன்னாள் ஆல்ரவுண்டர் இர்பான் பதான் கண்டி டஸ்கர்ஸ் அணிக்காக ஆடப் போவதாக தெரிய வந்துள்ளது. இந்த தகவலை அவரே உறுதிப்படுத்தியிருக்கிறார். இந்திய அணிக்காக 29 டெஸ்ட், 120 ஒருநாள் போட்டிகள் மற்றும் 24 டி20 போட்டிகளில் ஆடியுள்ள இர்பான் பதான் இந்த வருடத் துவக்கத்தில் அனைத்து விதமான சர்வதேச போட்டிகளில் இருந்தும் உள்ளூர் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.

Irfan

இந்நிலையில் மீண்டும் வந்து அவர் ஆட இருக்கிறார். இர்பான் பதான் ஆடும் அணியில்தான் அதிரடி தொடக்க வீரர் கிறிஸ் கெய்ல் ஆடப் போகிறார். அதே நேரத்தில் இந்த அணியின் உரிமையை பாலிவுட் நடிகர் சல்மான் கானின் தம்பி சொகைல் கான் வாங்கியிருக்கிறார். இந்த அணியில் பல சர்வதேச நட்சத்திர வீரர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement