ரோஹித்தையும், கோலியையும் அவுட் ஆக்கனும்னா பர்ஸ்ட் இதை செய்யுங்க – இர்பான் பதான் டிப்ஸ்

pathan 1

தற்போது உலகில் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்கள் ஆக இருப்பவர்கள் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா. இந்த வருட ஐபிஎல் தொடரில் அவர்கள் இருவரும் பெரிதாக தங்களது உண்மையான ஆட்டத்தை காட்டவில்லை. அப்படிப் பார்த்தாலும் பெங்களூரு அணியின் கேப்டனாக இருக்கும் விராட் கோலி 14 போட்டிகளில் விளையாடி 460 ரன்கள் குவித்திருக்கிறார். இதன் சராசரி 46 ஆகும்.

Rohith

அதேநேரத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா 11 போட்டிகளில் ஆடி 264 ரன்கள் குவித்திருக்கிறார். இதுதான் இந்த வருடத்தின் இவர்களது மோசமான ஆட்டம். மோசமான ஆட்டத்திலேயே இந்த அளவிற்கு குவிக்கக் கூடிய வல்லமை படைத்தவர்கள். இந்திய அணிக்கும் தன்னந்தனியாக பல போட்டிகளில் நின்று வெற்றி பெற்று கொடுத்திருக்கிறார்கள்.

ரோகித் சர்மா ஒரு கேப்டனாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 3 கோப்பைகளை வென்று கொடுத்திருக்கிறார். விராட் கோலி இரண்டு முறை பெங்களூர் அணி இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். இந்த வருடம் இந்த இரண்டு அணிகளுமே பிளே ஆப் சுற்றில் இருக்கின்றன. சொல்லப்போனால் மும்பை இந்தியன்ஸ் அணி இறுதிப் போட்டிக்கும் சென்று விட்டது.

Rohith-2

இந்த இரண்டு வீரர்களும் பெரிய போட்டிகளில் நன்றாக ஆடக்கூடியவர்கள். இருவரையும் விக்கெட் வீழ்த்த பந்துவீச்சாளர்கள் உழைத்துக் கொண்டிருப்பார்கள். இந்த இருவரையும் எப்படி வீழ்த்துவது என்று கூறியிருக்கிறார் முன்னாள் இந்திய ஆல் ரவுண்டர் இர்பான் பதான். அவர் கூறுகையில்….

- Advertisement -

Rohith

விராட் கோலிக்கு ஓவர்களில் 4 அல்லது 5 ஆவது ஸ்டம்ப் திசையில் பந்து வீச வேண்டும். அவரை ஆப் திசையை நோக்கி அடிக்க விட வேண்டும் அப்போது அவரது விக்கெட்டை எடுத்துவிடலாம். அதே நேரத்தில் ரோஹித் சர்மாவிற்கு அகலமாக பந்து வீசாமல், அவரது உடலை ஒட்டியே தொடர்ந்து பந்துகளை வீசி கொண்டே இருக்க வேண்டும். அப்போது ரோகித் சர்மாவின் விக்கெட்டுகளை வீழ்த்தி விடலாம் என்று தெரிவித்திருக்கிறார் இர்பான் பதான்.