சீயான் விக்ரமுடன் “விக்ரம் 58” ல் இணையவுள்ள இந்திய கிரிக்கெட் வீரர் – விவரம் இதோ

Vikram
- Advertisement -

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் புதிய படத்தில் இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் ஒருவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது தற்போது வைரலாக இணையத்தில் பரவி வருகிறது. அதன்படி கடாரம் கொண்டான் படத்தைத் தொடர்ந்து அஜய் ஞானமுத்து கூறிய கதை விக்ரமுக்கு பிடித்துவிடவே அதில் கதாநாயகனாக நடிகர் விக்ரம் ஒப்பந்தமானார்.

Vikram 1

- Advertisement -

லலித்குமார் தயாரிக்கும் இந்தப் படத்தின் முதற்கட்ட பணிகள் நீண்ட நாட்களாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் பெரிய முதலீட்டில் உருவாகும் படம் என்பதால் வெளிநாடுகளில் இதற்கான படப்பிடிப்பு இடங்கள் குறித்த தேர்வு நடைபெற்று வருகிறது. ஏ.ஆர் ரகுமான் இந்த படத்திற்கு இசையமைக்க உள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த அக்டோபர் 4 ஆம் தேதி சென்னையில் தொடங்கப்பட்டது. இந்த படத்தில் தற்போது முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் இர்பான் பதான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த படத்தின் மூலம் அவர் நடிகராக அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

irfan-pathan

படக்குழுவினரின் இந்த அறிவிப்பு விக்ரம் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இந்திய வீரர்கள் சிலர் இதற்கு முன்னர் தமிழ் படத்தில் நடித்திருந்தாலும் தமிழ் மொழியை சாராத ஒரு கிரிக்கெட் வீரர் தற்போது தமிழ் படத்தில் நடிக்க உள்ளது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement