டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் : அதிக விக்கெட்டுகளை எடுக்கப்போறது 2 பவுலர்கள் தான் – இர்பான் பதான் கணிப்பு

pathan 1
Advertisement

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளின் சுவாரஸ்யத்தை கூட்டுவதற்காக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை அறிமுகப்படுத்தியது ஐசிசி. அதன்படி கடந்த 2019ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த தொடரின் இறுதிப் போட்டியானது வருகிற 18ஆம் தேதி இங்கிலாந்தில் உள்ள ஏஜஸ் பவுல் மைதானத்தில் நடைபெற இருக்கின்றது. டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான புள்ளிகள் பட்டியலில் முதல் இரண்டு இரண்டு இடங்களைப் பிடித்த இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் இந்த இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருக்கின்றன. கிரிக்கெட் வராலாற்றிலேயே முதல் முறையாக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடர் நடைபெறுவதால், இந்த இறுதிப் போட்டியானது கிரிக்கெட் உலகில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

INDvsNZ

இந்நிலையில் இந்த போட்டி குறித்து இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான இர்பான் பதான் கூறுகையில் : இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக வேகப்பந்து வீச்சாளர்கள் இஷாந்த் ஷர்மா மற்றும் பும்ரா ஆகியோர் சிறப்பாக செயல்பட போகிறார்கள் என்பதில் எந்தவித சந்தேகமும் கிடையாது.

- Advertisement -

அதே நேரத்தில் மற்ற பந்து வீச்சாளர்களும் விக்கெட்டை வீழ்த்தும் ஆர்வத்தில் இருப்பார்கள் குறிப்பாக நியூசிலாந்து மற்றும் இந்திய அணி பொறுத்தவரை நியூசிலாந்து அணி சார்பாக ட்ரெண்ட் போல்ட்டும் இந்திய அணி சார்பாக ஷமி ஆகிய இருவரும் அதிக விக்கெட்டுகளை கைப்பற்ற வாய்ப்பு இருப்பதாக எனக்குத் தெரிகிறது என்று கூறியுள்ளார்.

boult

மேலும் சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர் நியூசிலாந்து அணிக்கு எதிராக சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்துவார்கள் என்று கூறியுள்ளார். டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை பொறுத்தவரை அஷ்வின் 13 போட்டிகளில் 67 விக்கெட்டுகளையும், ஜடேஜா 11 போட்டிகளில் விளையாடி 36 விக்கெட்டுக்களை வீழ்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Shami

மேலும் எப்போது ஷமி கிரிக்கெட்டில் சிறிது இடைவெளி விட்டு வந்தாலும் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்துவார். அந்த வகையில் இந்த போட்டியில் முகமது ஷமி அசத்துவார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

Advertisement