26 வயதில் இளம் அதிரடி வீரர் ஓய்வு அறிவிப்பு..! யார் தெரியுமா..? – புகைப்படம் உள்ளே

terry

கிரிக்கெட் உலகில் 35 வயதிற்கு மேல் பல கிரிக்கெட் வீரர்கள் இன்றும் விளையாடி கொண்டு வருகின்றனர். அதில் ஒரு சிலர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவில்லை என்றாலும் கிரிக்கெட்டில் இருந்து இன்னும் ஒய்வு பெறாமல் தான் இருக்கின்றனர். ஆனால், சமீபத்தில் 26 வயதே ஆன ஐயர்லாந்து வீரர் சீன் டெர்ரி கிரிக்கெட்டில் இருந்து ஒய்வு பெறுவதாக கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
sean
இங்கிலாந்து நாட்டில் பிறந்த இவர் பின்னர் ஆஸ்திரேலியாவில் வளர்ந்தார். ஆஸ்திரேலிய யு19 அணியில் விளையாடி வந்தார். பின்னர் இங்கிலாந்து கவுண்ட்டி கிரிக்கெட் அணியில் விளையாட துவங்கினார். அதன் பின்னர் ஐயர்லாந்து அணியில் தேர்வான இவர் 5 ஒரு நாள் போட்டியிலும் ஒரே ஒரு டி20 போட்டியில் விளையாடினார்.

இந்நிலையில் கடந்த செவ்வாய் கிழமை (ஜூலை 3) ஆம் தேதி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தான் ஒய்வு பெறுவதாக சீன் டெர்ரி அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் “மிகவும் கனத்த மனதுடன் எனது கிரிக்கெட் வாழ்வில் இருந்து ஒய்வு பெரும் முடிவை நான் எடுத்துள்ளேன். நான் ஐயர்லாந்து அணியில் ஆடியதை எண்ணி மிகவும் பெருமையடைகிறேன் ” என்று கூறியுள்ளார்.
sean-terry
இதுவரை 19 முதல் ரக கிரிக்கெட் போட்டிகளை விளையாடியுள்ள சீன் டெர்ரி, 713 ரன்களை குவித்துள்ளார். மேலும், ஏ அணிகளில் 21 போட்டிகளில் விளையாடி 357 ரன்களை குவித்துள்ளார். ஐயர்லாந்து அணியின் இளம் வீரரான இவரது கிரிக்கெட் ஒய்வு குறித்த இந்த அறிவிப்பு ஐயர்லாந்து கிரிக்கெட் ரசிகர்களிடேயே சற்று வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.