- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இந்தியாவை தோற்கடிச்சு 2 வருஷத்துக்கு முன்னாடி அங்க விட்டதை இங்க பிடிப்போம்.. அயர்லாந்து கோச் உறுதி

ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 தொடரில் இந்திய கிரிக்கெட் அணி தங்களுடைய முதல் போட்டியில் அயர்லாந்தை சந்திக்கிறது. அந்த போட்டி நியூயார்க் நகரில் ஜூன் ஐந்தாம் தேதி இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது. அதில் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா ஐசிசி தர வரிசையில் உலகின் நம்பர் ஒன் அணியாக திகழ்கிறது.

மேலும் விராட் கோலி, பும்ரா போன்ற தரமான மேட்ச் வின்னர்கள் இந்திய அணியில் நிறைந்திருக்கிறார்கள். எனவே இந்த போட்டியில் கொஞ்சம் கத்துக்குட்டியாக கருதப்படும் அயர்லாந்தை வீழ்த்தி இந்தியா வெல்லும் என்று நம்பப்படுகிறது. சொல்லப்போனால் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இதுவரை அயர்லாந்துக்கு எதிராக விளையாடிய 7 போட்டிகளிலும் இந்தியா வெற்றி கண்டுள்ளது.

- Advertisement -

டேட்டா இருக்கு:
இந்நிலையில் இந்திய வீரர்களின் பலம் பலவீனங்கள் பற்றிய டேட்டா தங்கள் கையில் இருப்பதாக அயர்லாந்து அணியின் பயிற்சியாளர் கேரி வில்சன் தெரிவித்துள்ளார். மேலும் 2022இல் தங்களுடைய சொந்த மண்ணில் நடைபெற்ற டி20 தொடரில் 2 போட்டிகளிலும் இந்தியாவுக்கு எதிராக கடைசி ஓவரில் அயர்லாந்து வெற்றியை நழுவ விட்டதாக அவர் கூறியுள்ளார். எனவே அங்கே தவற விட்ட வெற்றியை இந்தியாவை தோற்கடித்து இங்கே பெறுவோம் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இந்திய அணியை பற்றி எங்களுக்கு நிறைய தெரியும். அவர்கள் பற்றிய நிறைய டேட்டாவும் இருக்கிறது. அவர்கள் உலகம் முழுவதிலும் நிறைய போட்டிகளில் விளையாடியுள்ளனர். அடிப்படையில் அவர்களிடம் அனைவரும் நல்ல வீரர்களாக இருக்கின்றனர். ஆனால் எங்களிடமும் நல்ல வீரர்கள் இருக்கின்றனர். எனவே போட்டி நாளில் சிறந்த கிரிக்கெட்டை விளையாடும் போது அனைத்தும் திரும்பும் என்று நினைக்கிறேன்”

- Advertisement -

“இந்தியாவின் அனைத்து வீரர்களுக்கும் எங்களிடம் திட்டம் இருக்கிறது. எங்களுடைய அனலிஸ்ட் விடாமுயற்சி செய்கிறார். அதனால் இந்தியர்கள் விளையாடிய கிரிக்கெட்டை பற்றிய நிறைய டேட்டா எங்களிடம் உள்ளது. மலஹைட் நகரில் கடந்த சில வருடங்களுக்கு முன்பாக இந்தியாவுக்கு எதிராக நாங்கள் நெருக்கமான போட்டிகளைக் கொண்டிருந்தோம். துரதிஷ்டவசமாக அந்த போட்டிகளில் எங்களால் வெற்றியின் கோட்டை தாண்ட முடியவில்லை”

“அது எங்களுக்கு மிகப்பெரிய தன்னம்பிக்கையை கொடுக்கிறது. எனவே எங்களால் எந்த அணிக்கு எதிராகவும் அசத்த முடியும் என்பது எங்களுக்கு தெரியும். இந்தத் தொடருக்கு நாங்களும் நல்ல ஃபார்மில் வந்துள்ளோம்” என்று கூறினார். முன்னதாக 2022இல் 2 – 0 (2) என்ற கணக்கில் பாண்டியா தலைமையில் அயர்லாந்தை அதன் சொந்த மண்ணில் இந்தியா வீழ்த்தியது. அந்தத் தொடரில் அயர்லாந்து உண்மையாகவே இந்தியாவுக்கு சவாலை கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -