ஐபிஎல் அணிகள் உங்களைப்போல் கோலியை மட்டமாக பேசமாட்டாங்க – முன்னாள் பாக் வீரரை விளாசிய டேனிஷ் கனேரியா, காரணம் என்ன

Danish-Kaneria-and-Kohli
- Advertisement -

ஆசியக் கண்டத்தின் டாப் 2 கிரிக்கெட் அணிகளான இந்தியாவும் மற்றும் பாகிஸ்தானும் வெற்றி பெறும் போது கொண்டாடப்படுவதும் தோல்வி பெறும் போது விமர்சிக்கப் படுவதும் வழக்கமாகும். அந்த வகையில் சமீபத்திய ஆசிய கோப்பையில் சூப்பர் 4 சுற்றில் இந்தியாவை தோற்கடித்து பைனல் வரை சென்ற பாகிஸ்தான் தரவரிசையில் 8வது இடத்திலும் உள்ள இலங்கையிடம் டாஸ் அதிர்ஷ்டம் கிடைத்தும் சுமாராக செயல்பட்டு தோற்றது கடுமையான விமர்சனங்களை எழுப்பியுள்ளது. அதில் உலகின் நம்பர் ஒன் டி20 பேட்ஸ்மேன் என்ற பெயருக்கேற்றார் போல் அல்லாமல் கடைசி வரை மெதுவாக விளையாடி அவுட்டான முஹம்மது ரிஸ்வானின் பேட்டிங் நிறைய கேள்விகளை எழுப்பியுள்ளது.

IND vs PAK Babar Azam Rohit Sharma

- Advertisement -

அதைவிட தொடருக்கு முன்பாக நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக இருந்த பாபர் அசாம் இந்த ஆசிய கோப்பையில் சுமாராக செயல்பட்டு நம்பர் ஒன் இடத்தை இழந்து பைனலில் வெறும் 5 ரன்களுக்கு ஆட்டமிழந்தது தோல்விக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. ஆரம்ப காலங்களில் அதிரடியாக பேட்டிங் செய்து நம்பர் ஒன் உச்சத்தை எட்டிய அவர் நாளடைவில் கேப்டன்ஷிப் அழுத்தத்தால் சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற எண்ணத்துடன் குறைவான ஸ்டிரைக் ரேட்டில் விளையாடுவதும் முக்கிய அணிகளுக்கு எதிராக முக்கிய போட்டிகளில் சொதப்புவதும் பாகிஸ்தானுக்கும் தோல்வியை பரிசளிக்கிறது.

மட்டமான பேச்சு:
அந்த வகையில் குறைவான ஸ்டிரைக் ரேட்டில் விளையாடும் பாபர் அசாமை பிஎஸ்எல் தொடரில் கராச்சி கிங்ஸ் அணிக்காக விளையாடிய போது தங்களுடைய லாகூர் அணி தீவிரமாக அவுட் செய்ய முயற்சிக்கவில்லை என்று முன்னாள் பாகிஸ்தான் வீரர் ஆகிப் ஜாவேத் சமீபத்தில் விமர்சித்திருந்தார். அதாவது டி20 கிரிக்கெட்டில் அதிரடியை துவக்குவதற்கு பாபர் அசாம் நிறைய நேரம் எடுத்துக் கொள்வதால் சமீபத்திய பிஎஸ்எல் தொடரின் ஒரு போட்டியில் குறைவான இலக்கை கட்டுப்படுத்தும் போது பாகிஸ்தானின் கேப்டனான அவர் நல்ல பார்மில் விளையாட வேண்டும் என்பதற்காக தீவிரமாக அவுட்டாக்க முயற்சிக்காமல் விட்டுக் கொடுத்ததாக லாகூர் அணியின் இயக்குனராக இருக்கும் ஆகிப் ஜாவேத் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

Aakib Javed

ஆனால் பிஎஸ்எல் தொடரில் அவ்வாறு பந்து வீசுமாறு பாபர் அசாம் கேட்டாரா என ஆகிப் ஜாவேத்க்கு பதிலடி கொடுக்கும் முன்னாள் பாகிஸ்தான் வீரர் டேனிஷ் கனேரியா தங்களுடைய நாட்டுக்காக விளையாடும் கேப்டனை இப்படி தரம் தாழ்த்தி பேசுவதை தவிர்க்குமாறு எச்சரித்துள்ளார். மேலும் ஐபிஎல் தொடரில் இந்தியாவின் முதுகெலும்பு பேட்ஸ்மேன் என்பதற்காக விராட் கோலியை எஞ்சிய ஐபிஎல் அணிகள் அவுட்டாக்க முயற்சிக்கவில்லை என்று மட்டமாக எப்போதும் பேசியதில்லை எனக்கூறும் அவர் இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“அவர் (ஆகிப்) வீரராகவும் பயிற்சியாளராகவும் பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்காக நிறைய வருடங்கள் பங்காற்றியுள்ளார். அப்படிப்பட்ட ஒருவர் இது போன்ற கருத்துக்களை தெரிவிப்பது சரியல்ல. ஒரு முன்னாள் வீரராக இருக்கும் அவர் பாபர் அசாமை பிஎஸ்எல் தொடரின் போது அவுட்டாக்க முயற்சிக்கவில்லை என்ற கருத்துக்களை சொல்லியிருக்கக் கூடாது. ஏனெனில் அவரைப் போன்ற பெரிய வீரர்களை அவுட் செய்வது எப்போதும் சற்றுக் கடினமாகும். ஆனால் இது போன்ற கருத்துக்களை ஐபிஎல் தொடரில் விளையாடும் அணிகள் சொல்லி ஏன் நாம் பார்க்கவில்லை? ஐபிஎல் அணிகள் எப்போதும் விராட் கோலியை அவுட்டாக மாட்டோம் என்று சொன்னதே கிடையாது” என்று கூறினார்.

Kaneria

அதேபோல் உலகக் கோப்பையை விட காயத்தால் தவிக்கும் ஷாஹீன் அப்ரிடி முக்கியமான பவுலர் என்பதால் அவர் ஆஸ்திரேலியாவுக்கு செல்லாமல் உலக கோப்பையை தவிர்க்க வேண்டும் என்று ஆகிப் ஜாவேத் மற்றொரு கருத்தை தெரிவித்திருந்தார். ஆனால் நாட்டுக்காக அவரைப் போன்ற முக்கிய பவுலர் விளையாடவில்லையெனில் வேறு யார் விளையாடுவது என்று பதிலடி கொடுக்கும் டேனிஷ் கனேரியா இது பற்றி மேலும் பேசியது பின்வருமாறு.

“உலகக் கோப்பை என்பது அதில் பங்கேற்கும் அனைத்து நாடுகளுக்கும் முக்கியமான தொடராகும். அதில் ஷாஹீன் போன்ற கருப்பு குதிரை வேகப்பந்து வீச்சாளர் பாகிஸ்தானுக்காக விளையாடுவது அவசியமாகும். உலக கோப்பையில் விளையாடா விட்டால் வேறு எங்கு அவர் விளையாடுவார்? வருடம் முழுவதும் நடைபெறும் சாதாரண போட்டிகள் அனைத்தும் உலக கோப்பைக்கு தயாராவதற்காகத் தான் நடைபெறுகிறது. எனவே இதுபோன்ற கருத்துக்களை அவர் புகழ்ச்சிக்காக தெரிவிக்கிறார் என்று நினைக்கிறேன்” என கூறினார்.

Advertisement