கிரிக்கெட் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் 15-வது ஐபிஎல் சீசனுக்கான அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகி பெரிய அளவில் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகின்றன. அந்தவகையில் எதிர்வரும் 2022-ஆம் ஆண்டு 15வது ஐபிஎல் சீசனில் ஏற்கனவே உள்ள 8 அணிகளுடன் லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய அணிகள் இணைந்து மொத்தம் 10 அணிகளுடன் இந்த தொடரானது நடைபெற உள்ளது. இந்த தொடருக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் தலா நான்கு பேரை மட்டுமே தக்கவைக்க முடியும் என்றும் மற்ற வீரர்களை ஏலத்தில் விடவேண்டும் என்றும் பிசிசிஐ அறிவித்திருந்தது.
அதன்படி நேற்று நவம்பர் 30-ஆம் தேதி வரை தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிட அனைத்து அணிகளுக்கும் கெடு விதித்திருந்த பிசிசிஐ அதிகாரபூர்வமான தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலையும் வெளியிட்டுள்ளது. அதன்படி 8 அணிகளிலும் தக்க வைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை நாங்கள் உங்களுக்கு இந்த தெளிவாக வழங்கியுள்ளோம் முழு விவரம் இதோ :
சென்னை சூப்பர் கிங்ஸ் :
ரவீந்திர ஜடேஜா – 16 கோடி, இந்திய வீரர்
மகேந்திர சிங் தோனி – 12 கோடி, இந்திய வீரர்
ருதுராஜ் கெய்க்வாட் – 6 கோடி, இந்திய வீரர்
மொயின் அலி – 8 கோடி, வெளிநாட்டு வீரர்
மும்பை இந்தியன்ஸ் :
ரோகித் ஷர்மா – 16 கோடி, இந்திய வீரர்
ஜஸ்ப்ரீத் பும்ரா – 12 கோடி, இந்திய வீரர்
சூர்யகுமார் யாதவ் – 8 கோடி, இந்திய வீரர்
கைரன் பொல்லார்ட் – 6 கோடி, வெளிநாட்டு வீரர்
பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் :
விராட் கோலி – 15 கோடி, இந்திய வீரர்
முகமது சிராஜ் – 7 கோடி, இந்திய வீரர்
கிளென் மேக்ஸ்வெல் – 11 கோடி, வெளிநாட்டு வீரர்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் :
ரசல் – 12 கோடி, வெளிநாட்டு வீரர்
வருண் சக்கரவர்த்தி – 8 கோடி, இந்திய வீரர்
வெங்கடேஷ் ஐயர் – 8 கோடி, இந்திய வீரர்
சுனில் நரைன் – 6 கோடி, வெளிநாட்டு வீரர்
டெல்லி கேபிட்டல்ஸ் :
ரிஷப் பண்ட் – 16 கோடி, இந்திய வீரர்
அக்சர் பட்டேல் – 9 கோடி, இந்திய வீரர்
பிருத்வி ஷா – 7.5 கோடி, இந்திய வீரர்
ஆன்ரிச் நோர்க்யா – 6.5 கோடி, வெளிநாட்டு வீரர்
ராஜஸ்தான் ராயல்ஸ் :
சஞ்சு சாம்சன் – 14 கோடி, இந்திய வீரர்
ஜாஸ் பட்லர் – 10 கோடி, வெளிநாட்டு வீரர்
யாஷஸ்வி ஜெய்ஸ்வால் – 4 கோடி, இந்திய வீரர்
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் :
கேன் வில்லியம்சன் – 14 கோடி, வெளிநாட்டு வீரர்
அப்துல் சமாத் – 4 கோடி, இந்திய வீரர்
உம்ரான் மாலிக் – 4 கோடி, இந்திய வீரர்
பஞ்சாப் கிங்ஸ் :
மயங்க் அகர்வால் – 12 கோடி, இந்திய வீரர்
மற்றும் அர்ஷ்தீப் சிங் – 4 கோடி, இந்திய வீரர்