அணியில் அதிரடி மாற்றம் ! ரெய்னாவிற்கு பதிலாக தொடக்க வீரராக மிரட்டவரும் அதிரடி ஆட்டக்காரர் !

Raina

விவோ ஐ. பி. எல் சீஸின் 11 யில் சென்னையில் அணியில் ஆடிவரும் சுரேஷ் ரெய்னா வரும் சனிக்கிழமை நடக்கவுள்ள பஞ்சாபிற்கு எதிரான போட்டியில் பங்குபெற போவதில்லை என்று தெரியவந்துள்ளது.IPl சீசன் ஆரம்பித்த முதல் சீஸினிலிருந்து சென்னை அணிக்காக ஆடி வருபவர் சுரேஷ் ரெய்னா.

raina-injury

தற்போது சீஸனில் சென்னை ஆடிய இரண்டு போட்டிகளிலும் சென்னை அணி வெற்றிபெற்றிருந்தாலும் நடந்து முடிந்த இரண்டு போட்டிகளிலும் ரெய்னா சரியாக ஆடவில்லை என்பதே உண்மை .மேலும் கடைசியாக கொல்கத்தா அணியுடன் ஆடிய போதும் ரெய்னாவிற்கு காயம் ஏற்பட்டது .இதனால் அந்த போட்டியில் ஆடிய போதே மிகவும் சிரமபட்ட ரெய்னா. பின்னர் பெரிதாக ரன் எதுவும் எடுக்கமுடியாமல் அவுட் ஆகிவிட்டார். எனவே காயம் காரணமாக வரும் சனிக்கிழமை நடக்கவிருக்கும் பஞ்சாபிற்கு எதிரான போட்டியில் ரெய்னா பங்கு பெற மாட்டார் என்று தெரியவந்துள்ளது.

ஏற்கனவே சென்னை அணியின் முக்கிய வீர்களான முரளி விஜய்,கேதர் ஜாதவ்,டூபிலீசி போன்ற ஆட்டக்காரர்கள் காயம் காரணமாக அணியில் இடம்பெறாத நிலையில் தற்போது ரெய்னாவும் அடுத்த போட்டியில் விளையாடாதது சென்னை அணிக்கு மிகுந்த நெருக்கடியை கொடுத்துள்ளது.

murali viajy
ஆனால் ஏற்கனவே நடந்து முடிந்த இரண்டு ஆட்டங்களிலும் பங்கேற்காத முரளி விஜயின் காயம் தற்போது குணடைந்து வருவதால் அவர் பஞ்சாபிற்கு எதிரான போட்டியில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ஆனால் சின்ன ரெய்னா அணியில் இடம்பெறாத நிலையில் தொடக்க ஆட்டக்காரர்களான வாட்ஸன் மற்றும் முரளி விஜய் கூட்டணியையே சென்னை அணி முழுவதும் நம்பியுள்ளது.