இனி வீரர்களை கடனுக்கு வாங்கலாம் ஐபிஎல் நிர்வாகம் அதிரடி. புதிய விதிமுறையை அறிவித்து அதிரடி காட்டிய – நிர்வாகம்

Ipl cup
- Advertisement -

ஐபிஎல் தொடரை மெருகூட்டும் விதமாக ஒவ்வொரு வருடமும் பல வித்தியாசமான யுத்திகளை கையாண்டு வருகிறது ஐபிஎல் கமிட்டி. கால்பந்தில் காணப்படுவது போல ஒவ்வொரு அணியும் வீரர்களை தங்களுக்குள் மாற்றிக்கொள்ளும் நடைமுறை சென்ற வருடம் அறிமுகப்படுத்தப்பட்டது.

staripl

- Advertisement -

இதில் குறிப்பாக வீரர்களை கடனுக்கு வாங்கும் பழக்கமும் விதியும் இருந்தது. அதில் குறிப்பாக வெளியூர் வீரர்கள் அல்லது, இந்திய அணியில் முதல்தர போட்டியில் ஆடிய இந்திய வீரர்களை மட்டுமே கடனுக்கு வாங்கி கொள்ளலாம் என்று சென்ற வருடம் ஐபிஎல் நிர்வாகம் அறிவித்திருந்தது.

இந்நிலையில் இந்த வருடம் அந்த நடைமுறையை மாற்றி எந்த ஒரு வீரரையும், வெளிநாட்டு வீரரையும் சேர்த்து யாரை வேண்டுமென்றாலும் கடனுக்கு கேட்டு வாங்கி கொள்ளும் விதியை அறிமுகம் செய்துள்ளது ஐபிஎல் கமிட்டி .

ipl

அதாவது எந்த ஒரு சர்வதேச வீரரையும் தொடரின் பாதியில் வேறு அணிக்கு பணம் கொடுக்காமல் மாற்றிக் கொள்ளலாம் என்பதுதான் இந்த விதி. இந்த விதி ஒவ்வொரு அணியும் 7 போட்டிகளில் விளையாடிய பின்னர் அல்லது 28 போட்டிகள் முடிந்த பின்னர் நடைமுறைக்கு வரும் எனவும் கமிட்டி அறிவித்துள்ளது.

- Advertisement -

இதனால் எந்த ஒரு அணியும் யாரும் விலைக்கு வாங்கமுடியும் என்பதால் தொடரின் பாதியில் போட்டியின் முடிவை மாற்றும் எந்த ஒரு வீரரையும் தொடரை கைப்பற்ற நினைக்கும் அணி வாங்கிக்கொள்ளலாம். இந்த விதிமுறை மூலம் தொடரை கைப்பற்ற நினைக்கும் அணிகள் முக்கிய வீரரை வாங்க முடியும்.

ipl

இதனால் இந்த ஐ.பி.எல் தொடரில் பாதி தொடரிற்கு மேல் எந்த ஒரு அணியும் கோப்பையை கைப்பற்ற பல வாய்ப்புகள் இருப்பதால் இந்த தொடரில் பல்வேறு திருப்பங்கள் இருக்கும் என்றும் மட்டும் தெளிவாக தெரிகிறது.

Advertisement