ஐ.பி.எல் தொடரில் அதிக மெய்டன் வீசிய பவுலர் யார் தெரியுமா ? மலிங்கா கூட இல்லையாம் – டாப் 5 பவுலர்கள் இதோ

ipl-bowlers
- Advertisement -

இந்தியாவில் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் திருவிழா நடந்து வருகிறது. இதுவரை 12 ஐபிஎல் தொடர்களில் முடிந்துள்ளது. 13ஆவது ஐபிஎல் தொடர் கரோனா வைரஸ் தாக்கம் காரணமாக காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. டி20 கிரிக்கெட்டில் எப்போதும் பேட்ஸ்மேன்கள் தான் ஆதிக்கம் செலுத்துவார்கள். இப்படி இருக்கையில் ஐபிஎல் தொடரில் பேட்ஸ்மேன்களுக்கு மத்தியில் அதிக மெய்டன் ஓவர்கள் வீசிய பந்து வீச்சாளர்களை பற்றி தற்போது பார்ப்போம்.

- Advertisement -

சந்தீப் சர்மா :

இந்த பட்டியலில் 5வது இடத்தில் உள்ளவர் சந்தீப் சர்மா. இவர் மொத்தம் 12 தொடர்களில் 79 போட்டிகளில் ஆடியுள்ளார். மொத்தமாக 290.5 ஓவர்கள் வீசி 8ம் மெய்டன் ஓவர்கள் வீசியுள்ளார். மேலும், அதுமட்டுமின்றி இதுவரை ஐ.பி.எல் தொடரில் 95 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

லசித் மலிங்கா :

- Advertisement -

ஐபிஎல் கிரிக்கெட் பந்து வீச்சு ஜாம்பவான் இவர். இந்த பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 122 போட்டிகளில் பங்கேற்று 471 ஓவர்கள் வீசியுள்ளார். அதிகபட்சமாக 8 மெய்டன ஓவர்கள் வீசியுள்ளார். மேலும், இதுவரை ஐ.பி.எல் தொடரில் 170 விக்கெட்டுகளையும் சாய்த்துள்ளார்.

தவால் குல்கர்னி :

- Advertisement -

இந்திய அணிக்காக ஆடியுள்ள இவர் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகளில் விளையாடி உள்ளார். 12 ஐபிஎல் தொடர்களில் சேர்த்து 90 போட்டிகளில் ஆடி 296 ஓவர்கள் வீசியுள்ளார். இவரும் 8 மெய்டன் ஓவர்கள் வீசி 86 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

இர்பான் பதான் :

- Advertisement -

முன்னாள் இந்திய வீரரான இவர் இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார். மொத்தம் 103 போட்டிகளில் பங்கேற்று 340 ஓவர்கள் பவுலிங் செய்துள்ளார். இதில் 10 மெய்டன் ஓவர்கள் வீசப்பட்டுள்ளது. 80 விக்கெட்டுகளும் எடுக்கப்பட்டுள்ளது.

Praveen-Kumar

பிரவீன்குமார் :

இந்த பட்டியலில் முதல் இடத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் இவர் இடம் பிடித்துள்ளார் பிரவீன் குமார் . 119 போட்டிகளில் பங்கேற்று 420 ஓவர்கள் பவுலிங் செய்துள்ளார் பிரவீன்குமார். அதில் 14 மெய்டன் ஓவர்கள் வீசி 90 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

Advertisement