இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர வீரருமான மகேந்திர சிங் தோனி இங்கிலாந்தில் நடைபெற்ற 2019ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் ஓய்வு பெற்று விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தோனி இதுவரை தனது ஓய்வு குறித்து எந்த ஒரு அதிகாரபூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.

தோனி ராணுவ பயிற்சி ஈடுபடுவதற்காக சில மாதங்களும், அதன் பின்னர் சில மாதங்கள் ஓய்வும் எடுத்துக்கொண்டார். ஆனால் கடந்த எட்டு மாதங்களுக்கும் மேலாக அவர் எந்தவித கிரிக்கெட்டிலும் ஆடாமல் இருக்கிறார். அது மட்டுமின்றி இந்திய அணி தோனியை விட்டு இந்திய அணி தற்போது நகர்ந்து விட்டது என்றே கூறலாம்.
ஏனெனில் இந்திய அணியின் வீரர்களுக்கான ஒப்பந்த பட்டியலிலிருந்து டோனியின் பெயர் நீக்கப்பட்டதை அடுத்து தோனி இந்திய அணியில் மீண்டும் இடம் பிடிப்பது கடினம் என்று தெரியவந்துள்ளது.

ஆனாலும் 2020 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை தொடரில் இடம்பிடிப்பதற்காக தோனி காத்திருப்பதாக அவர் தரப்பிலிருந்து செய்திகள் வெளியாகியது. ஆனாலும் அவர் இன்றுவரை அணியில் இடம்பெறவில்லை. இருப்பினும் தற்போது ஐபிஎல் தொடரில் சிறப்பாக ஆடும் பட்சத்தில் டி20 உலகக் கோப்பைக்கான அணியில் மீண்டும் இடம் பிடிக்கலாம் என்ற நம்பிக்கையில் தோனி இருக்கிறார்.
அதுமட்டுமின்றி டோனிக்கு பதிலாக விக்கெட் கீப்பராக உருவாக்கப்படும் பண்ட் தொடர்ந்து சொதப்பி வருவதால் அவருக்கு பதிலாக ராகுல் விக்கெட் கீப்பிங் செய்யும் நிலை உருவாகி உள்ளது. எனவே தோனி மீண்டும் அணியில் இடம்பிடித்து உலகக்கோப்பையில் விக்கெட் கீப்பிங் செய்வார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரும் அறிவிக்கப்பட்டது. அதிலும் தோனி இல்லை எனவே தோனி எதிர்காலம் இத்தோடு முடிவடைந்துவிட்டது என்று தெரிகிறது.

மேலும் அவர் குறித்து தெளிவாக யாரும் விவாதிக்கவில்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது. ஆனால் புதிய தேர்வுக்குழு தலைமையில் வெளியான தகவலின்படி தோனி ஐபிஎல் தொடரில் நன்றாக ஆடும் பட்சத்தில் மீண்டும் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி ஓரங்கட்டப்பட்ட அனைத்து வீரர்களுக்கும் ஐபிஎல் தொடர் ஒரு வாய்ப்பாக அமையும் என்றும் பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.



