CSK vs GT : ரிசர்வ் டே-வான இன்று போட்டி எத்தனை மணிக்கு துவங்கும்? – இன்றும் மழை பெய்தால் என்ன ஆகும்?

ipl-finals
- Advertisement -

இந்தியாவில் நடைபெறும் வரும் நடப்பு 16-ஆவது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியானது நேற்று மே 28-ஆம் தேதி இரவு அகமதாபாத் நகரில் உள்ள உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறயிருந்தது. ஆனால் நேற்று கொட்டி தீர்த்த பலத்த மழை காரணமாக போட்டி நடைபெறாமல் போனது. அதோடு இந்த இறுதிப்போட்டியானது இன்று மே 29-ஆம் தேதி ரிசர்வ் டே வில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.

CSK vs GT

- Advertisement -

அதன்படி தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணிக்கும் இடையேயான இந்த இறுதிப்போட்டியானது இன்று அதே நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறயிருக்கிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி கோப்பையை கைப்பற்றும் என்பதால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சம் தொட்டுள்ளது.

இந்நிலையில் இந்த போட்டியானது எத்தனை மணிக்கு துவங்கும்? இன்றும் மழை பெய்தால் என்ன நடக்கும்? என்பது குறித்த தெளிவான தகவலை இங்கு காணலாம். அதன்படி இந்த இறுதிப்போட்டியானது இன்று இரவு 7.30 மணி துவங்கும். ஒருவேளை இன்றும் மழை பெய்தால் போட்டியை எப்படியாவது நடத்த அம்பயர்கள் முடிந்தவரை காத்திருப்பார்கள்.

Motera

அதாவது இன்று இரவும் 9.40pm வரை காத்திருப்பார்கள். அதற்குள் போட்டி துவங்கி விட்டால் ஓவர்கள் குறைக்கப்படாமல் 20 ஓவர்கள் கொண்ட முழு போட்டியும் நடைபெறும். அப்படி நடைபெறாமல் மேலும் போட்டி துவங்க தாமதமானால் ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கும் ஓவர்கள் படிப்படியாக குறையும்.

- Advertisement -

இறுதியில் 5 ஓவர்கள் கொண்ட போட்டியாகவோ அல்லது ஒரு ஓவர் கொண்ட போட்டியாகோ நடத்தும் வாய்ப்பு இருந்தால் கூட போட்டி நடைபெறும். ஆனால் மழை இடைவிடாது பெய்து போட்டி நடைபெற சாத்தியமே இல்லை என்றால் இறுதிப்போட்டி கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டு குஜராத் அணி சாம்பியன் பட்டம் வென்றதாக அறிவிக்கப்படும்.

இதையும் படிங்க : CSK vs GT : தகுதியற்ற சிஎஸ்கே ஃபைனல் வந்ததே அதிர்ஷ்டம் தான், இதுல கோப்பைக்கு ஆசைப்படலாமா? முன்னாள் இந்திய வீரர் அதிரடி

ஏனெனில் ஐ.பி.எல் விதிமுறைப்படி இறுதிப்போட்டி ஏதாவது ஒரு இயற்கை காரணத்தினால் நடைபெற முடியாமல் போனால் லீக் சுற்றுகள் அடிப்படையில் எந்த அணி அதிக வெற்றிகளை பெற்றிருந்ததோ அந்த அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். அந்த வகையில் சென்னை அணியை காட்டிலும் புள்ளிபட்டியலில் முதலிடத்தில் இருந்த குஜராத் அணி சாம்பியனாக அறிவிக்கப்படும்.

Advertisement