CSK vs GT : தகுதியற்ற சிஎஸ்கே ஃபைனல் வந்ததே அதிர்ஷ்டம் தான், இதுல கோப்பைக்கு ஆசைப்படலாமா? முன்னாள் இந்திய வீரர் அதிரடி

CSK vs GT 2
- Advertisement -

உலகப் புகழ் பெற்ற ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதி போட்டி மே 28ஆம் தேதி அகமதாபாத் நகரில் துவங்கியது. அதில் லீக் மற்றும் நாக் அவுட் சுற்றில் தேவையான வெற்றிகளை பெற்ற முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் கோப்பைக்காக மோதுகின்றன. இருப்பினும் மழையால் மொத்தமாக ரத்து செய்யப்பட்ட அந்த போட்டி இன்றைய ரிசர்வ் நாளில் மீண்டும் நடைபெற உள்ளது. அந்தப் போட்டியில் இந்தியாவுக்கு 3 விதமான உலக கோப்பைகளை வென்று கொடுத்த மகத்தான எம்எஸ் தோனி மிகச்சிறப்பாக கேப்டன்ஷிப் செய்து கோப்பையுடன் விடை பெறுவாரா என்று அந்த அணி ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

- Advertisement -

ஆனால் இந்த 2 அணிகளை ஒப்பிடும் போது சந்தேகமின்றி குஜராத் மிகவும் வலுவான அணியாக இருக்கிறது. ஏனெனில் கடந்த வருடம் தோற்றுவிக்கப்பட்டு முதல் சீசனிலேயே ஹர்திக் பாண்டியா தலைமையில் சொல்லி அடித்து கோப்பையை வென்ற குஜராத் இம்முறையும் அதே போல புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்து முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. அதை விட சர்வதேச கிரிக்கெட்டிலேயே சமீபத்தில் அடுத்தடுத்த சதங்களை அடித்து சிறப்பான ஃபார்மில் இருக்கும் சுப்மன் கில் இந்த சீசனில் 851 ரன்கள் குவித்து ஆரஞ்சு தொப்பியை வென்று உச்சகட்ட செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருகிறார்.

அதிர்ஷ்டம் தான்:
குறிப்பாக கடைசி 2 போட்டிகளில் அடுத்தடுத்து சதமடித்து விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா போன்ற ஜாம்பவான்கள் அங்கம் வகிக்கும் பெங்களூரு மற்றும் மும்பையை இத்தொடரிலிருந்து வெளியேற்றிய அவர் ஃபைனல் நடைபெறும் அகமதாபாத் மைதானத்திலும் கடைசி 2 போட்டிகளில் சதமடித்துள்ளார். அது போக சஹா, பாண்டியா, மில்லர், திவாடியா என அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் நல்ல ஃபார்மில் இருக்கும் நிலையில் ஷமி, ரசித் கான், மோஹித் சர்மா ஆகிய பவுலர்கள் ஊதா தொப்பி பட்டியலில் டாப் 3 இடங்களில் மிரட்டுகின்றனர்.

மறுபுறம் சென்னை அணியிலோ டேவோன் கான்வே – ருதுராஜ் ஆகியோருடன் சிவம் துபே மட்டுமே தொடர்ந்து நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருகின்றனர். அதே போல் பந்து வீச்சில் துஷார் தேஷ்பாண்டே ரன்களை வாரி வழங்கும் நிலையில் பதிரனா மட்டுமே நம்பிக்கை நட்சத்திரமாக செயல்படுகிறார். அத்துடன் ஃபைனல் நடைபெறும் அகமதாபாத் மைதானத்தை தங்களது கோட்டையாக வைத்திருக்கும் குஜராத் இந்த வருடத்தின் முதல் போட்டியிலேயே சென்னையை தோற்கடித்தது. அதனால் இந்த போட்டியில் குஜராத் வெல்வதற்கு அதிக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கும் முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் மகத்தான தோனியின் சிறந்த கேப்டன்ஷிப் காரணத்தாலேயே சென்னை ஃபைனல் வரை வந்துள்ளதாக கூறியுள்ளார்.

- Advertisement -

சொல்லப்போனால் அதிர்ஷ்டத்தால் இந்த இடத்தை சென்னை பிடித்துள்ளதாக தெரிவிக்கும் அவர் உண்மையாக புள்ளி பட்டியலில் டாப் 4 இடத்தை பிடிக்கும் தகுதியுடைய அணியாக இல்லை என்று கூறியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “அவருடைய திட்டம் மிகவும் எளிதானது. அதாவது சென்னை அணியின் விளையாடும் 11 பேர் அணியில் நாம் பெரிய அளவில் மாற்றங்களை பார்க்கவில்லை. அதற்கான முழுமையான பாராட்டுக்களும் எம்எஸ் தோனியை சேரும். உண்மையை சொல்ல வேண்டுமெனில் டாப் 4 இடத்தை பிடிக்கும் அணியாக சிஎஸ்கே காட்சியளிக்கவில்லை”

Jaffer

“ஏனெனில் இந்த சீசனில் ஆரம்பத்திலேயே சேப்பாக்கத்திற்கு வெளியே அவர்களுடைய பவுலர்கள் தாக்கத்தை ஏற்படுத்தும் அளவுக்கு அசத்தவில்லை. இருப்பினும் அவர்கள் புள்ளி பட்டியலில் 2வது இடத்தை பிடித்துள்ளார்கள். அது தோனியின் மேஜிக்கால் மட்டுமே சாத்தியமானது. மறுபுறம் குஜராத் டைட்டன்ஸ் அணியில் சிறந்த ஆப்ஷன்கள் உள்ளன. அவர்களிடம் 2 தரமான ஸ்பின்னர்களும் சொந்த மைதானத்தில் மிரட்டும் அளவுக்கு ஆழமான பேட்டிங் வரிசையும் உள்ளது”

இதையும் படிங்க:CSK vs GT : தகுதியற்ற சிஎஸ்கே ஃபைனல் வந்ததே அதிர்ஷ்டம் தான், இதுல கோப்பைக்கு ஆசைப்படலாமா? முன்னாள் இந்திய வீரர் அதிரடி

“முன்னதாக சென்னைக்கு எதிரான குவாலிபயர் 1 போட்டியில் அவர்கள் சற்று அதீத நம்பிக்கையுடன் செயல்பட்டு தோற்றதாக நான் கருதினேன். ஆனால் தற்போது அவர்கள் மீண்டும் ஹர்திக் பாண்டியா மற்றும் சாய் சுதர்சன் விளையாடும் பழைய டெம்ப்ளேட்டுக்கு வந்துள்ளனர். எனவே மீண்டும் அதே டெம்ப்ளேட்டை அவர்கள் பின்பற்றினால் இப்போட்டியில் குஜராத் வெல்வதற்கு அதிக வாய்ப்புள்ளது” என்று கூறினார்.

Advertisement