- Advertisement -
ஐ.பி.எல்

தள்ளிப்போகும் ஐ.பி.எல் தொடரின் முக்கிய போட்டி. இருந்தாலும் கரெக்ட்டா நடக்கும் – விவரம் இதோ

இந்த வருட ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் நவம்பர் எட்டாம் தேதி வரை நடக்க இருக்கிறது. முன்னதாக மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் நடக்க இருந்தது. ஆனால் எதிர்பாராத கொரோனா வைரஸ் காரணமாக தற்போது தள்ளி வைக்கப்பட்டு நடத்தப்பட இருக்கிறது.

அதன்பின்னர் அணி நிர்வாகம், பங்குதாரர்கள், ஒளிபரப்பு நிறுவனம் ஆகிய பலர் கேட்டுக்கொண்டதற்கு ஏற்ப ஐபிஎல் நிர்வாகம் அக்டோபர் 26 ஆம் தேதியில் தொடங்க இருந்த ஐபிஎல் தொடரை செப்டம்பர் 19ஆம் தேதிக்கு மாற்றியது பிசிசிஐ. மேலும் ,ஐபிஎல் தொடரின் ஒளிபரப்பு நிறுவனமான ஸ்டார் நிறுவனம் ஐபிஎல் தொடரை மக்களிடம் பெரும்பான்மையாக உபயோகித்து விட வேண்டும் என்று திட்டம் தீட்டியிருந்தது.

- Advertisement -

மேலும் இறுதிப்போட்டியை இம்முறை ஞாயிற்று கிழமை நடத்த வேண்டாம் என்றும் தீபாவளி நெருக்கத்தில் வைக்குமாறு கேட்டுக்கொண்டனர். ஏனெனில் பண்டிகை காலத்தில் மக்கள் அனைவரும் வீட்டில் இருப்பார்கள். இதன் காரணமாக அந்த காலகட்டத்தில் போட்டியை நடத்த வேண்டும் என்று திட்டமிட்டு இருந்தது.

அதன்படி தீபாவளி நவம்பர் 14ஆம் தேதி வருகிறது. நவம்பர் எட்டாம் தேதி ஐபிஎல் தொடரின் இறுதி போட்டி நடந்தால் அது ரசிகர்களுக்கு சிறப்பான விடயமாக அமையும். மேலும் இம்முறை தான் இதுபோன்று ஞாயிறு அல்லாத தினத்தில் இறுதிப்போட்டி நடைபெறயிருப்பது குறிப்பிடத்தக்கது. எனவே பண்டிகை காரணமாக ஐபிஎல் தொடரை நீட்டித்து இறுதிப் போட்டியை தீபாவளி வாரத்திற்கு தள்ளி வைக்க ஸ்டார் நிறுவனம் கோரிக்கை வைத்தது.

இதன் காரணமாக நவம்பர் 8 ஆம் தேதி என திட்டமிடப்பட்டிருந்த ஐபிஎல் இறுதிப் போட்டி நவம்பர் 10ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது. இதன் அனைத்து முடிவுகளும் ஆகஸ்ட் 2ஆம் தேதி அதிகாரபூர்வமாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -
Published by