ஐ.பி.எல் 2021 : மீதமுள்ள 31 ஐ.பி.எல் போட்டிகளுக்கான அட்டவணை தயார் – வெளியான நற்செய்தி

Rohith
- Advertisement -

இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி துவங்கிய 14வது ஐபிஎல் தொடரானது முதற்கட்ட போட்டிகளை சிறப்பாக முடித்து இருந்த வேளையில் இரண்டாவது கட்ட போட்டி போட்டிகள் அகமதாபாத் மற்றும் டெல்லி ஆகிய மைதானங்களில் துவங்கின. அப்போது வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட கொரோனா பரவல் காரணமாக 29 போட்டிகள் முடிவடைந்த நிலையில் மீதமுள்ள 31 போட்டிகள் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டன.

IPL

- Advertisement -

பிறகு இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கும் குறைந்த பின்னர் போட்டிகள் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்றளவும் இந்தியாவில் கொரோனாவின் தாக்கும் இன்னும் முழுமையாக மீளவில்லை என்ற காரணத்தினாலும், செப்டம்பர் அக்டோபர் மாதத்தில் இந்தியாவில் மழைக்காலம் என்பதினாலும் ஐக்கிய அரபு அமீரகத்தில் மீதமுள்ள 31 போட்டிகளையும் நடத்தலாம் என்று முடிவுசெய்யப்பட்டது.

அதன்படி கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிசிசிஐ சார்பில் நடத்தப்பட்ட கூட்டத்தில் இறுதியான முடிவுகள் உறுதி செய்யப்பட்டது. அதன் பின்னர் தற்போது எஞ்சியுள்ள 31 போட்டிகளுக்கான அட்டவணை குறித்தும் தீவிர ஆலோசனை செய்து வந்தது. அதன் பிறகு தற்போது அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்று ஐபிஎல் நிர்வாகம் சார்பாக வெளியாகியுள்ளது.

Dubai

அதன்படி மீதி உள்ள 31 போட்டிகள் 25 நாட்களில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரே நாளில் இரண்டு போட்டிகளை நான்குமுறை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு ஐக்கிய அரபு அமீரகம் ஓகே தெரிவித்துள்ளதால் நிச்சயம் இந்த தொடரானது 25 நாட்களில் திட்டமிட்டபடி சரியாக நடத்தி முடிக்கப்படும் என்ற நம்பிக்கை உருவாகியுள்ளது. ஏற்கனவே இந்த ஐபிஎல் தொடர் அட்டவணையை திட்டம் இடுவதற்காக ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ள சில அதிகாரிகள் இதனை திட்டமிட்டுள்ளனர்.

IPL

மேலும் 3 மைதானங்களிலும் அதாவது ஷார்ஜா, துபாய், அபுதாபி ஆகிய மூன்று மைதானங்களிலும் 30 சதவீத பார்வையாளர்களை அனுமதிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த தொடருக்கான அதிகாரபூர்வ அட்டவணை பட்டியல் மற்றும் தேதி ஆகியவை ஜூன் 28-ஆம் தேதி தெரியவரும் என பிசிசிஐ வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement