- Advertisement -
ஐ.பி.எல்

அடுத்த ஆண்டு 2027 ஐ.பி.எல் தொடரின் போட்டி அட்டவணையில் ஏற்படவுள்ள முக்கிய மாற்றம் – விவரம் இதோ

இந்தியாவில் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகளானது நடைபெற்று வருகிறது. இதுவரை 19 சீசன்கள் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ள வேளையில் அடுத்த ஆண்டு 20-வது சீசனாக 2027 ஐ.பி.எல் தொடரானது நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே 2025 ஆம் ஆண்டு சாம்பியன் பட்டத்தை வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த 2026 ஐ.பி.எல் தொடரின் சாம்பியன் பட்டத்தையும் வென்று அசத்தியது.

அடுத்த ஆண்டு ஐ.பி.எல் தொடரில் ஏற்படவுள்ள மாற்றம் :

இதற்கடுத்து அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஐ.பி.எல் போட்டிகளில் எந்த அணி கோப்பையை கைப்பற்றும்? என்பது குறித்த எதிர்பார்ப்பும் தற்போதே ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது. அதோடு அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஐ.பி.எல் தொடருக்கு முன்னதாக பல்வேறு முக்கிய மாற்றங்கள் இருக்கும் என்று பேசப்பட்டு வந்தது.

- Advertisement -

இவ்வேளையில் 2027 ஐ.பி.எல் தொடரின் போட்டிகளுக்கான அட்டவணையில் முக்கிய மாற்றம் ஏற்பட உள்ளதாக தற்போது பி.சி.சி.ஐ சார்பில் ஒரு முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் வெளியான தகவல் படி இந்த ஆண்டு நடைபெற்ற 2026 ஐபிஎல் தொடராது மார்ச் 28-ம் தேதி துவங்கி மே 31-ம் தேதி வரை நடைபெற்றது. இந்த நாட்களில் வீரர்கள் விளையாடியதால் கடுமையான வெயிலில் மிகவும் சிரமப்பட்டனர்.

எனவே வீரர்களின் உடல் நிலையை கருத்தில் கொண்டு அடுத்த ஆண்டு 2027 ஐ.பி.எல் தொடரை முன்கூட்டியே துவங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில் அடுத்த ஆண்டு மார்ச் 10 -ம் தேதியே இந்த தொடரானது துவங்கப்பட்டு மே 15-க்கு முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

- Advertisement -

இதையும் படிங்க : விராட் கோலி மற்றும் ஷிகர் தவானின் சாதனையை முறியடித்து அசத்திய சுப்மன் கில் – விவரம் இதோ

அதோடு இந்த ஆண்டு மொத்தமாக 74 போட்டிகள் நடைபெற்ற வேளையில் அடுத்த ஆண்டு ஐ.பி.எல் தொடரில் 94 போட்டிகள் வரை நடைபெற வாய்ப்புள்ளதாகவும், அதற்கேற்றார் போல் போட்டிகளுக்கான அட்டவணையிலும் பல மாற்றங்கள் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

- Advertisement -