ஐபிஎல் 2022 பிளே ஆஃப் : பைனலில் மழை வந்தால் கப் யாருக்கு? வெளியான 5 அதிகாரபூர்வ ரூல்ஸ் இதோ

IPL 2022
- Advertisement -

இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 15-வது சீசன் கடந்த மார்ச் 26-ஆம் தேதியன்று மும்பை நகரில் கோலாகலமாக துவங்கி இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரில் அதிக கோப்பைகளை வென்று வெற்றிகரமான ஐபிஎல் அணிகள் என பெயரெடுத்த மும்பையும் சென்னையும் தொடர் தோல்விகளால் முதல் 2 அணிகளாக லீக் சுற்றுடன் வெளியேறியது. இருப்பினும் புதிதாக உருவாக்கப்பட்ட லக்னோ மற்றும் குஜராத் ஆகிய அணிகள் ஆரம்பம் முதலே பெற்ற சிறப்பான வெற்றிகளால் முதல் சீசனிலேயை பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று அசத்தியுள்ளன.

IPL 2022 (2)

- Advertisement -

அதேபோல் வரலாற்றின் முதல் சாம்பியன் ராஜஸ்தான் மற்றும் காலம் காலமாக முதல் கோப்பையை வெல்ல துடிக்கும் பெங்களூரு ஆகிய அணிகளும் முதல் 4 இடங்களைப் பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. இதைத்தொடர்ந்து இந்த வருடத்தின் சாம்பியன் பட்டத்தை தீர்மானிக்கும் பிளே ஆஃப் சுற்றுப் போட்டிகளின் விவரம் இதோ:

குவாலிபயர் 1 : மே 24, குஜராத் V ராஜஸ்தான், இரவு 7.30 மணி, ஈடன் கார்டன்ஸ் கொல்கத்தா.
எலிமினேட்டர் : மே 25, லக்னோ V பெங்களூரு, இரவு 7.30 மணி, ஈடன் கார்டன்ஸ், கொல்கத்தா.
குவாலிபயர் 2 : மே 27, குவாலிபயர் 1 தோல்வியாளர் V எலிமினேட்டர் வெற்றியாளர், இரவு 7.30 மணி, அஹமதாபாத்
பைனல் : இரவு 8 மணி, மே 29, அஹமதாபாத்.

IPL Umpires

மும்பை நகரில் இதுவரை நடைபெற்ற 70 லீக் போட்டிகள் மழையின் அச்சுறுத்தல் இல்லாமல் முழுமையாக ரசிகர்களை மகிழ்வித்த நிலையில் மே 24, 25 ஆகிய தேதிகளில் கொல்கத்தா நகரில் மழைக்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதால் அப்போட்டி மழையால் தடைபட்டால் என்னாகும், யார் வெற்றி பெறுவார், இறுதிப் போட்டியில் மழை வந்தால் கோப்பை யாருக்கு என்பது போன்ற முக்கியமான விதிமுறைகளை ஐபிஎல் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதைப் பற்றி பார்ப்போம்:

- Advertisement -

1. சூப்பர் ஓவர்: பொதுவாக ஒரு போட்டிக்கு 200 நிமிடங்கள் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மழையால் பைனல் உட்பட அனைத்து ப்ளே ஆஃப் போட்டிகளிலும் தடை ஏற்படும் பட்சத்தில் முடிந்த அளவுக்கு ஓவர்கள் குறைக்கப்பட்டு முடிவு காண்பதற்கு அம்பயர்கள் முயற்சிப்பார்கள். குறைந்தது 5 ஓவர்கள் கொண்ட போட்டியை நடத்தி அம்பயர்கள் முடிவு காண முயற்சிப்பார்கள். அதையும் தாண்டி மழை குறுக்கிட்டால் சூப்பர் ஓவர் எனப்படும் இரு அணிகளுக்கும் தலா 1 ஓவர் வழங்கப்பட்டு அதன் அடிப்படையில் முடிவு தீர்மானிக்கப்படும்.

gt

அந்த வகையில் பிளே ஆப் போட்டிகளில் 9.40 மணிக்கு முன்பு மழை குறுக்கீடு நின்றுவிட்டால் 20 ஓவர்கள் முழுமையாக வழங்கப்படும். அந்த நேரம் அதிக பட்சமாக 10.10 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதை தாண்டி போட்டி துவங்கும் போதுதான் ஓவர்கள் குறைக்கப்படும்.

- Advertisement -

2. லீக் சுற்றில் டாப்: ஒருவேளை மேற்குறிப்பிட்ட அம்சங்களையும் தாண்டி ஒரு பந்து கூட வீச விடாமல் மழை அடித்து நொறுக்கி முழுமையாக போட்டி ரத்து செய்யப்படும் பட்சத்தில் லீக் சுற்றில் புள்ளிப் பட்டியலில் யார் டாப் இடங்களை பிடித்தார்களோ அவர்கள் வெற்றிபெற்ற அணிகளாக கருதப்படுவார்கள்.

IPL

எடுத்துக்காட்டாக குவாலிபயர் 1 போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டால் முதலிடம் பிடித்த குஜராத் நேரடியாக பைனலுக்கு போகும். 2-வது இடம் பிடித்த ராஜஸ்தான் குவாலிபயர் 2 போட்டிக்கு போகும். அதேபோல் எலிமினேட்டர் போட்டியில் மழை பெய்தால் 4-வது இடம் பிடித்த பெங்களூரு அத்தோடு வெளியேறும். 3-வது இடம் பிடித்த லக்னோ ராஜஸ்தானுடன் மோத குவாலிபயர் 2 போட்டிக்கு செல்லும். பின் குவாலிபயர் 2 போட்டியிலும் மழை பெய்தால் ராஜஸ்தான் ஃபைனலுக்கு போகும்.

- Advertisement -

3. ரிசர்வ் டே: மே 24, 25, 27 ஆகிய தேதிகளில் நடைபெறும் குவாலிபயர் மற்றும் எலிமினேட்டர் போட்டிகளுக்கு போல் அல்லாமல் மே 29இல் நடைபெறும் இறுதிப் போட்டிக்கு ரிசர்வ் டே ஒதுக்கப்பட்டுள்ளது.

IPL

மே 29இல் நடைபெறும் இறுதிப் போட்டியிலும் மழை குறுக்கிட்டால் முடிந்தளவுக்கு ஓவர்கள் குறைக்கப்பட்டு 5 ஓவர் போட்டியாக நடத்தப்படும் அல்லது அதையும் தாண்டி மழை பெய்தால் சூப்பர் ஓவர் அடிப்படையில் வெற்றியாளர் தீர்மானிக்கப்படும். ஒருவேளை அன்றைய நாளில் முழுவதுமாக மழை பெய்து ஆட்டம் ரத்து செய்யப்பட்டால் அடுத்த நாள் அதாவது மே 30இல் போட்டி மீண்டும் நடைபெறும்.

4. பைனல்: இந்த வருட இறுதி போட்டி நிறைவு விழா காரணமாக 8 மணிக்கு துவங்க உள்ளது. அந்த போட்டியிலும் மேற்குறிப்பிட்ட விதிமுறைகள் அடிப்படையில் மழை குறுக்கிட்டால் ஓவர்கள் குறைக்கப்பட்டு குறைந்தது 5 ஓவர்கள் அல்லது சூப்பர் ஓவர் அடிப்படையில் வெற்றியாளர் தீர்மானிக்கப்படும். மேலும் பைனல் என்பதால் வழக்கமான 200 நிமிடங்களுடன் சேர்த்து எக்ஸ்ட்ராவாக 2 மணி நேரங்கள் வழங்கப்படும். அதில் அதிகபட்சமாக வெற்றியாளரை தீர்மானிக்கக்கூடிய சூப்பர் ஓவரும் அதிகபட்சமாக அதிகாலை 1.20 மணிக்குள் வீசப்பட வேண்டும்.

இதையும் படிங்க : உங்கள இதனால தான் டி20 அணியில் எடுக்க முடியல. தவானுக்கு போன் செய்து விளக்கம் அளித்த – கோச் டிராவிட்

ஒருவேளை அன்றைய நாளிலும் முழுமையாக மழை பெய்து ரிசர்வ் நாளிலும் மழை பெய்தால் சூப்பர் ஓவரில் கூட வெற்றியாளர் தீர்மானிக்கப்பட முடியாமல் போனால் வேறு வழியின்றி பைனலில் விளையாடும் 2 அணிகளில் புள்ளி பட்டியலில் யார் டாப் இடங்களைப் பிடித்தாரோ அவர்கள் கோப்பையை முத்தமிடுவார்கள்.

Advertisement