உங்கள இதனால தான் டி20 அணியில் எடுக்க முடியல. தவானுக்கு போன் செய்து விளக்கம் அளித்த – கோச் டிராவிட்

Dravid
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் பதினைந்தாவது ஐபிஎல் தொடரானது வருகிற 29-ஆம் தேதி முடிவடைகிறது. அதனைத் தொடர்ந்து ஜூன் 9-ஆம் தேதி முதல் 19-ம் தேதி வரை 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் தென்னாப்பிரிக்க அணியை எதிர்த்து இந்திய அணி விளையாட இருக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணி நேற்று பிசிசிஐ மூலமாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. அந்த அணியில் இந்திய அணியின் சீனியர் வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி, முகமது ஷமி மற்றும் பும்ரா போன்ற வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

IND

- Advertisement -

மேலும் அவர்களுக்கு பதிலாக ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய இளம் வீரர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது. இப்படி இந்திய அணி அறிவிக்கப்பட்டதில் இருந்து சில வீரர்களை அணியில் சேர்த்திருக்கலாம் என்றும் சில வீரர்களை அணியில் இருந்து நீக்கி இருக்கலாம் என்றும் பல விவாதங்கள் சமூகவலைதளத்தில் நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில் இந்திய அணியின் அனுபவ வீரர் ஷிகர் தவான் ஐபிஎல் தொடரில் அற்புதமாக விளையாடி இருந்ததால் அவரை இந்திய அணியில் சேர்த்திருக்கலாம் என்று அவருக்கு ஆதரவாக குரல்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் ஷிகர் தவானை ஏன் அணியில் சேர்க்கவில்லை என்பது குறித்து இந்திய அணியின் பயிற்சியாளர் டிராவிட் போன் செய்து தவானிடம் பேசியதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

dravid

இது குறித்து வெளியான தகவலின் படி இந்திய அணி அறிவிக்கப்பட்டதும் சில வீரர்களுக்கு நிச்சயம் ஏமாற்றம் கிடைத்திருக்கும். அந்தவகையில் அனுபவ வீரரான தவானுக்கு இடம் கொடுக்கவில்லை என்பதனால் அவரிடமே போன் செய்த டிராவிட் : இந்திய அணி தற்போது டி-20 உலகக்கோப்பை தொடருக்காக தயார் செய்யப்பட உள்ளதால் இனி இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க விரும்புகிறோம்.

- Advertisement -

அதனால் இந்த டி20 தொடரில் உங்களுக்கு வாய்ப்பு கொடுக்க முடியாது. ஆனால் ஒருநாள் தொடரில் நிச்சயம் உங்களது பெயர் பரிசீலிக்கப்படும் என்று டிராவிட் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக இனிவரும் டி20 தொடர்களிலும் அதிக அளவில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : ஆடம்பர வாட்ச்க்கு ஆசைப்பட்டு 1 கோடியே 63 லட்சத்தை பறிகொடுத்த ரிஷப் பண்ட் – ஏமாற்றிய கிரிக்கெட் வீரர்

இதன் காரணமாக இனிவரும் டி20 தொடர்களில் நிச்சயம் தவான் இடம்பெற வாய்ப்பில்லாததால் அவர் டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓரங்கட்டப்பட்டு விட்டார் என்றே கூறலாம். அதேவேளையில் ஒருநாள் போட்டிகளில் நிச்சயமாக அனுபவ வீரராக அவர் தொடர்ந்து இந்திய அணிக்காக விளையாடுவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement