குஜராத் அணியை எளிதாக வீழ்த்தி பலத்தை நிரூபித்த ஆர்.சி.பி – கடைசியா அவரும் பார்முக்கு வந்துட்டாரு

Virat Kohli Du Plessis RCB vs GT
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரின் லீக் சுற்று போட்டிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் மே 19-ஆம் தேதி நடைபெற்ற 67-வது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் குஜராத் ஏற்கனவே புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்து முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்ற நிலையில் பெங்களூருக்கு இது வாழ்வா – சாவா போன்ற போட்டியாக அமைந்தது. அந்த நிலைமையில் வான்கடே மைதானத்தில் நடைபெற்ற அந்தப் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் பேட்டிங் செய்வதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய அந்த அணியின் நம்பிக்கை நட்சத்திர தொடக்க வீரர் சுப்மன் கில் 1 (4) ரன்னில் அவுட்டாகி ஏமாற்றினார்.

Matthew Wade Glen Maxwell

- Advertisement -

அப்போது களமிறங்கிய மேத்யூ வேட் அதிரடியாக 16 (13) ரன்கள் எடுத்தாலும் திடீரென அவுட்டாகி செல்ல மறுபுறம் அதிரடி காட்டி கொண்டிருந்த மற்றொரு தொடக்க வீரர் ரிதிமான் சஹா அடுத்த சில ஓவர்களில் 4 பவுண்டரி 1 சிக்சருடன் 31 (22) ரன்களில் ஆட்டமிழந்தார். அதனால் 62/3 என தடுமாற்றமான தொடக்கத்தை பெற்ற குஜராத்தை அதன் கேப்டன் ஹர்திக் பாண்டியா மேலும் சரிய விடாமல் தாங்கிப் பிடித்தார்.

இலக்கு 169:
அவருக்கு உறுதுணையாக அடுத்து களமிறங்கிய டேவிட் மில்லர் கைகொடுக்க 4-வது விக்கெட்டுக்கு 61 ரன்களை பார்ட்னர்ஷிப் சேர்த்த இந்த ஜோடியில் 3 சிக்சருடன் 34 (25) ரன்களில் டேவிட் மில்லர் ஆட்டமிழக்க அடுத்து வந்த ராகுல் திவாடியா 2 (3) ரன்களில் ஏமாற்றினார். இருப்பினும் மறுபுறம் நங்கூரமாக நின்ற கேப்டன் ஹர்திக் பாண்டியா 4 பவுண்டரி 3 சிக்சருடன் 62* (47) ரன்கள் எடுக்க கடைசி நேரத்தில் வெறும் 6 பந்தில் 1 பவுண்டரி 2 சிக்சர்கள் பறக்கவிட்ட ரசித் கான் 19* ரன்கள் எடுத்து சூப்பர் பினிஷிங் கொடுத்தார். அதனால் 20 ஓவர்களில் குஜராத் 168/5 ரன்கள் எடுக்க பெங்களூரு சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக ஹேசல்வுட் 2 விக்கெட்டுகள் எடுத்தார்.

அதை தொடர்ந்து 169 என்ற வெற்றி இலக்கை துரத்திய பெங்களூருவுக்கு தொடக்க வீரர்களாக களமிறங்கிய விராட் கோலி – கேப்டன் டுப்லஸ்ஸிஸ் ஜோடி முதல் ஓவரிலிருந்தே நிதானமாகவும் அதிரடியாகவும் பேட்டிங் செய்தது. இதில் பார்மின்றி கடும் விமர்சனங்களால் தவிக்கும் இந்திய நட்சத்திரம் விராட் கோலி இன்றைய போட்டியில் ஓரளவு பார்முக்கு திரும்பியது போல் ஆரம்பம் முதலே அதிரடியான பவுண்டரிகளை பறக்க விட்டு ரன்களை சேர்த்தார். இதில் ஒருபுறம் விராட் கோலி தன்னம்பிக்கையுடன் அதிரடியாக ரன்களை குவிக்க மறுபுறம் டு பிளேஸிஸ் அவருக்கு கம்பெனி கொடுக்கும் வகையில் மெதுவாக பேட்டிங் செய்தார்.

- Advertisement -

பெங்களூரு வெற்றி:
குஜராத் பவுலர்களை சிறப்பாக கையாண்டு முதல் விக்கெட்டுக்கு 115 ரன்கள் சேர்த்து நல்ல வெற்றிக்கு ஆரம்பத்திலேயே அற்புதமான அடித்தளமிட்ட இந்த ஜோடியில் 5 பவுண்டரியுடன் 44 (38) ரன்கள் எடுத்து 15-வது ஓவரில் டு பிளேஸிஸ் ஆட்டமிழந்தார். இருப்பினும் மறுபுறம் அசத்தலாக பேட்டிங் செய்த விராட் கோலி 8 பவுண்டரி 2 சிக்சருடன் அரைசதம் கடந்து 73 (54) ரன்கள் எடுத்து வெற்றியை உறுதி செய்து ஆட்டமிழந்தார்.

Virat Kohli Du Plessis RCB vs GT 2

இறுதியில் 5 பவுண்டரி 2 சிக்சர்களை பறக்கவிட்ட கிளன் மேக்ஸ்வெல் அதிரடியாக 40* (18) ரன்களை எடுத்து சூப்பர் பினிஷிங் கொடுத்ததால் 18.4 ஓவர்களிலேயே 170/2 ரன்களை எடுத்த பெங்களூரு 8 விக்கெட் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியைப் பதிவு செய்தது. குஜராத் சார்பில் பந்துவீச்சில் ரஷித் கான் மட்டும் 2 விக்கெட்டுகள் எடுத்தார். அதனால் பங்கேற்ற 14 போட்டிகளில் 4-வது தோல்வியை பதிவு செய்தாலும் தொடர்ந்து 20 புள்ளிகளுடன் குஜராத் முதலிடத்தில் நீடிக்கிறது.

பார்முக்கு திரும்பிய கிங்:
இந்த வாழ்வா – சாவா போட்டியில் முதலில் பந்து வீச்சில் கச்சிதமாக செயல்பட்ட பெங்களூரு குஜராத்தை அதிக ரன்கள் எடுக்க விடாமல் கட்டுப்படுத்தியது. அதேபோல் குஜராத்தின் பலமே அதன் வலுவான பந்துவீச்சு தான் என்பதை அறிந்த பெங்களூருவின் நட்சத்திரம் விராட் கோலி தனது முழு அனுபவத்தையும் இந்த முக்கிய போட்டியில் காட்டி ஆரம்பத்திலேயே விக்கெட்டை விடாமல் 73 (54) ரன்கள் எடுத்து எளிதான வெற்றிக்கு வித்திட்டார்.

RCB Faf Virat

குறிப்பாக ரசித் கான், சாய் கிசோர் ஆகிய தரமான குஜராத் சுழல் பந்துவீச்சாளர்களை விட்டு விட்டு எஞ்சிய வேகப்பந்து வீச்சாளர்கள் அத்தனை பேரையும் சரமாரியாக அடித்த விராட் கோலி, டு பிளசிஸ், கிளன் மேக்ஸ்வெல் ஆகியோர் தங்களது பலத்தை நிரூபித்து சிறப்பான வெற்றியைப் பெற்றுக் கொடுத்தனர். இதனால் பங்கேற்ற 14 போட்டிகளில் 8-வது வெற்றியை பதிவு செய்த பெங்களூரு 16 புள்ளிகளுடன் டெல்லியை முந்தி 4-வது இடத்திற்கு முன்னேறியது. ஆனாலும் மே 21இல் நடைபெறும் 69-வது லீக் போட்டியில் டெல்லியை மும்பை தோற்கடித்தால் மட்டுமே அந்த அணியால் ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.

Advertisement