ஐபிஎல் 2022 போட்டி 3 : பஞ்சாப் – பெங்களூரு, வெல்லப்போவது யார்? உத்தேச அணிகள், பிட்ச் ரிப்போர்ட் இதோ

PBKS vs RCB
- Advertisement -

உலகப்புகழ் பெற்ற ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடர் மார்ச் 26-ஆம் தேதியன்று மும்பை வான்கடே மைதானத்தில் கோலாகலமாக துவங்கியது. இந்த தொடரில் இன்று அதாவது மார்ச் 27-ஆம் தேதியன்று 2 போட்டிகள் ரசிகர்களுக்கு விருந்து படைக்க உள்ளன. அதில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 2-வது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகள் மோதுகின்றன.

RCBvsKXIP

- Advertisement -

பஞ்சாப் – பெங்களூரு மோதல்:
நவிமும்பையில் உள்ள புகழ்பெற்ற டிஒய் பாட்டில் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் வெற்றி பெற்று ஐபிஎல் தொடரை வெற்றியுடன் துவங்குவதற்காக 2 அணிகளும் போராடும் என்பதால் இந்த போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என நம்பலாம். இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி மற்றும் டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் மொபைல் ஆப் வாயிலாக ரசிகர்களை நேரடியாக கண்டு களிக்கலாம்.

பஞ்சாப்: பஞ்சாப் அணியை பொறுத்தவரை கடந்த வருடம் விளையாடிய கேஎல் ராகுல் விலகியதை அடுத்து அனுபவம் இல்லாத புதிய கேப்டன் மயங்க் அகர்வால் தலைமையில் இந்த ஐபிஎல் தொடரில் களமிறங்குகிறது. இதுநாள் வரை ஒரு முறை கூட கோப்பையை வெல்ல முடியாமல் தவித்து வரும் அந்த அணி சமீப காலங்களாக பிளே ஆஃப் சுற்றுக்கு செல்வதற்குக் கூட திண்டாடி வருகிறது. எனவே இந்த முறை மிக சிறப்பாக செயல்பட்டு குறைந்தபட்சம் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் அந்த அணி களமிறங்க உள்ளதால் பெங்களூருக்கு எதிரான முதல் போட்டியில் வெற்றி பெற போராட உள்ளது.

Agarwal

பெங்களூரு: பஞ்சாப் அணியை போல கோப்பையை வெல்ல முடியாவிட்டாலும் சமீப காலங்களாக போராட்டங்களுக்கு பின் பிளே-ஆப் சுற்றுக்கு பெங்களூரு அணி தகுதி பெற்று வருகிறது. அந்த அணிக்கு 2013 முதல் 2021 வரை கேப்டன்ஷிப் செய்து வந்த நட்சத்திரம் விராட் கோலி அந்த அணிக்கு முதல் கோப்பையை வெல்ல எவ்வளவோ முயன்ற போதிலும் அந்த முயற்சி தோல்வி அடைந்ததால் கடந்த வருடம் கேப்டன் பதவியில் இருந்து விலகி சாதாரண வீரராக சுதந்திரமாக விளையாட உள்ளார். எனவே புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ள டு பிளேஸிஸ் தலைமையில் முதல் கோப்பையை வெல்வதற்காக பஞ்சாப் அணிக்கு எதிரான முதல் போட்டியில் பெங்களூரு அணி முழு மூச்சுடன் விளையாடும் என நம்பலாம்.

- Advertisement -

புள்ளிவிவரம்:
1. ஐபிஎல் வரலாற்றில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகள் இதுவரை மொத்தம் 28 போட்டிகளில் நேருக்கு நேர் பலப்படுத்திய நடத்தியுள்ளன. அதில் 15 போட்டிகளில் வெற்றி பெற்ற பஞ்சாப் முன்னிலை வகிக்கிறது. பெங்களூரு 13 போட்டிகளில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது.

faf du plessis RCB

2. கடைசியாக இந்த 2 அணிகள் மோதிய 5 போட்டிகளில் பஞ்சாப் 3 போட்டிகளில் வெற்றி பெற்றது. பெங்களூரு 2 போட்டிகளில் மட்டும் வென்றது.

- Advertisement -

3. கடந்த 2021-ஆம் ஆண்டு இவ்விரு அணிகள் மோதிய 2 போட்டிகளில் இரு அணிகளும் தலா 1 வெற்றி பெற்றது. இந்த போட்டி நடைபெறும் டிஒய் பாட்டில் மைதானத்தில் இவ்விரு அணிகளும் முதல் முறையாக மோதுகின்றன.

RCB

பிட்ச் ரிப்போர்ட்:
இந்த போட்டி நடைபெறும் டிஒய் பாட்டில் மைதானத்தில் நீண்ட நாட்களுக்கு பின் ஐபிஎல் போட்டிகள் நடைபெறுகின்றன. இந்த மைதானம் வரலாற்றில் பேட்டிங் மற்றும் பவுலின் ஆகிய இரண்டுக்குமே சம அளவு சாதகமாக இருந்து வருகிறது. எனவே முழு திறமையை வெளிப்படுத்தும் யாராக இருந்தாலும் இங்கு வெற்றி பெறலாம். இந்த மைதானத்தின் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 147 ஆகும். மேலும் இது இரவு நேர போட்டியாக நடைபெறுவதால் டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பந்து வீச தீர்மானித்து பின்னர் சேசிங் செய்வது வெற்றிக்கு விடலாம்.

- Advertisement -

உத்தேச அணிகள்:
பஞ்சாப் கிங்ஸ்: பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் மயங்க் அகர்வால் மற்றும் அனுபவம் வாய்ந்த ஷிகர் தவன் விளையாடுவார்கள் என எதிர்பார்க்கலாம். அதேபோல் 3-வது இடத்தில் சமீப காலங்களாக பஞ்சாப் அணிக்காக உள்ளூர் கிரிக்கெட்டில் அசத்திய விக்கெட் கீப்பர் ப்ரப்சிம்ரான் சிங் வாய்ப்பைப் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 4-வது இடத்தில் 11.50 கோடிகளுக்கு வாங்கப்பட்ட இங்கிலாந்து ஆல்ரவுண்டர் லியம் லிவிங்ஸ்டன் விளையாட 5-வது இடத்தில் தமிழகத்தின் வளர்ந்து வரும் பினிஷர் சாருக்கான் விளையாடுவார்.

pbks 1

அந்த அணிக்கு சுழல் பந்து வீச்சாளராக கடந்த சீசனில் கலக்கிய ஹ்ரப்ரீட் ப்ரார் மற்றும் புதிதாக வாங்கப்பட்ட ராகுல் ஆகியோர் விளையாட உள்ளனர். வேகப்பந்து வீச்சாளர்களாக ரிஷி தவான், வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஓடென் ஸ்மித் ஆகியோருடன் கடந்த வருடம் பஞ்சாப் அணிக்காக கலக்கிய அர்ஷிதீப் சிங் விளையாட உள்ளார். அவருடன் சமீபத்தில் நடந்த அண்டர்-19 உலக கோப்பையில் மிரட்டிய ராஜ் பாவாவுக்கு வாய்ப்பு கிடைக்கும் என நம்பலாம்.

பஞ்சாப் கிங்ஸ் அணியின் உத்தேச 11 பேர் அணி இதோ:
மயங்க் அகர்வால் (கேப்டன்), ஷிகர் தவான், ப்ரப்சிம்ரன் சிங் (கீப்பர்), லியம் லிவிங்ஸ்டன்*, ஷாருக்கான், ராஜ் பாவா, ஓடென் ஸ்மித்*, ரிஷி தவான், ராகுல் சஹர், ஹார்ப்ரீத் ப்ரார், அர்ஷிதீப் சிங். (*=வெளிநாட்டு வீரர்கள்)

RCB

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு:
பெங்களூரு அணியின் தொடக்க வீரராக முன்னாள் கேப்டன் விராட் கோலி மற்றும் புதிய கேப்டன் டு பிளேஸிஸ் ஆகியோர் களம் இறங்கலாம். 3-வது இடத்தில் இளம் இந்திய வீரர் மஹிபால் லோமரர் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில் 4-வது இடத்தில் கிளன் மேக்ஸ்வெல் இல்லாத காரணத்தால் மற்றொரு வெளிநாட்டு வீரர் பின் ஆலன் களம் இறங்கலாம்.

5 மற்றும் 6 ஆகிய இடங்களில் முறையே தமிழகத்தின் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி வீரர் ஷாபின் ரூதர்போர்ட் பினிஷெராக செயல்பட உள்ளனர். பெங்களூர் அணியின் சுழற்பந்து வீச்சாளர்களாக பெரிய தொகைக்கு வாங்கப்பட்ட இலங்கையின் பணிந்து ஹசரங்கா மற்றும் இந்திய வீரர் சபாஷ் அஹமட் வாய்ப்பு பெற உள்ளனர். அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர்களாக கடந்த வருடம் ஊதா தொப்பி வென்ற ஹர்ஷல் படேல், முகமது சிராஜ், சித்தார்த் கவுல் அகில இந்திய வீரர்கள் விளையாட உள்ளனர்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் உத்தேச 11 பேர் அணி இதோ:
விராட் கோலி, பப் டு பிளேஸிஸ்* (கேப்டன்), மஹிபால் லோமரர், பின் ஆலன்*, தினேஷ் கார்த்திக் (கீப்பர்), ஷாபின் ரூதர்போர்ட்*, வணிந்து ஹஸரங்கா*, சபாஸ் அஹமட், முகமது சிராஜ், சித்தார்த் கௌல், ஹர்ஷல் படேல். (*=வெளிநாட்டு வீரர்கள்)

Advertisement