யு.ஏ.இ ல ஸ்டார்ட் ஆகப்போது ஐ.பி.எல் – ஒருவழியா முடிவு எடுத்து ஐ.பி.எல் தேதிகள் அறிவிப்பு – ரசிகர்களுக்கு நற்செய்தி

Ganguly-ipl

கொரானா பரவலின் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டு காலவரையின்றி தள்ளிவைக்கப்பட்டருந்த இந்த ஆண்டின் ஐபிஎல் தொடரானது, செப்டம்பர் மாதத்தின் மூன்றாவது வாரத்தில் மீண்டும் தொடங்கப்பட்டு அக்டோபர் மாதத்தில் முடிவடையும் என்று நம்பத்தகுந்த தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஐபிஎல் போட்டிகள் தொடங்கப்படும் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் 09 ஆம் தேதி தொடங்கப்பட்ட ஐபிஎல் 14வது சீசினின் பாதியிலேயே, தொடரில் பங்கேற்றிருந்த பல்வேறு வீரர்களுக்கு கொரனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் நடப்பு ஐபிஎல் தொடரை காலவரையின்றி ஒத்தி வவைக்கும் முடிவை எடுத்த பிசிசிஐ, எஞ்சிய ஐபிஎல் போட்டிகளை நடத்த தகுந்த கால கட்டத்தையும், இடத்தையும் தேர்வு செய்வதில் மும்மரம் காட்டி வந்தது.

IPL

பல்வேறு ஆலோசனைகள் மற்றும் சாத்தியக் கூறுகளை ஆராய்ந்த பிசிசிஐ வட்டார ஊழியர்கள் தற்போது எஞ்சிய ஐபிஎல் போட்டிகளை நடத்த ஐக்கிய அமீரகத்தை தேர்வு செய்திருக்கின்றனர். பிசிசிஐயின் இந்த முடிவை ஐபிஎல் தொடரில் பங்கேற்றிருக்கும் அணிகளின் நிர்வாகங்களும் உறுதி செய்திருக்கின்றன. அதன்படி, எஞ்சியுள்ள ஐபிஎல் போட்டிகளின் முதல் போட்டியானது ஐக்கிய அமீரகத்தில், செப்டம்பர் மாதம் 18 ஆம் தேதியிலிருந்து 20ஆம் தேதிக்குள்ளாக தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் செப்டம்பர் 18 மற்றும் 19ஆம் தேதிகளானது வாரத்தின் இறுதி நாட்கள் என்பதால், நிச்சயமாக அந்த இரண்டு நாட்களில் ஏதாவது ஒரு நாளில் தான் முதல் போட்டி துவங்கும் என்றும் தெரியவந்துள்ளது.

- Advertisement -

ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியானது அக்டோபர் மாதத்தின் 9 அல்லது 10ஆம் தேதி நடத்தப்படும் என்றும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டிருக்கிறது. குறுகிய கால இடைவெளிகளில் 31 போட்டிகளை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால், ஒரே நாளில் இரண்டு போட்டிகள் நடைபெறும், டபுள் ஹெட்டர்ஸ் நாட்கள் 10 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் 7 நாட்கள் ஒரே போட்டி மட்டுமே கொண்ட நாட்களாக அமையும் என அறிவித்த பிசிசிஐ, ப்ளே ஆஃப் சுற்று போட்டிகளும் அது போலவே நடைபெறும் என்றும் அறிவித்திருக்கிறது.

IPL-1

இங்கிலாந்து தொடர் முடிந்ததும், செப்டம்பர் 15ஆம் தேதி அங்கிருந்து அப்படியே அனைத்து இந்திய வீரர்களும் தனி விமானத்தில் ஐக்கிய அமீரகத்திற்கு புறப்பட இருக்கின்றனர். இவர்களுடன் ஐபிஎல்லில் கலந்து கொள்ள விரும்பும் இங்கிலாந்து வீரர்களையும் பிசிசிஐ அழைத்துச் செல்லுமென்று அறிவித்திருக்கிறது. ஐக்கிய அமீரகத்தில் மூன்று நாள் தனிமைப்படுத்தலுக்கு வீரர்கள் உட்படுத்தப்பட இருக்கிறார்கள்.

- Advertisement -

ipl-2021-ind

மேலும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற இருக்கும் கரீபியன் ப்ரீமியர் லீக் முடிந்த பின்னர் அந்நாட்டு வீரர்களும் ஐபிஎல் தொடரில் பங்கு பெற ஐக்கிய அமீரகம் வந்து சேர்ந்துவிடுவார்கள் என்றும் அறிவித்துள்ளது பிசிசிஐ வட்டாரம். ஐபிஎல்லின் இரண்டாம் கட்ட போட்டிகள் முடிவடைந்த சிறிது நாட்களிலேயே, டி20 உலக கோப்பை தொடர் நடைபெற இருப்பதால் இந்த ஐபிஎல் போட்டிகள் இந்திய வீரர்களுக்கு, உலக கோப்பை தொடருக்கு தயராவதற்கான நல்ல பயிற்சி போட்டிகளாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Advertisement