கடந்த போட்டியில் ஏற்பட்ட தோல்வி காரணமாக அணியில் 2 முக்கிய மாற்றங்களை செய்த கோலி – பிளேயிங் லெவன் இதோ

RCBvsDC
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 22ஆவது போட்டி தற்போது அகமதாபாத் மைதானத்தில் துவங்க இருக்கிறது. இந்த போட்டியில் கேப்டன் கோலி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதவிருக்கின்றன. டாஸில் வெற்றிபெற்ற ரிஷப் பண்ட் முதலில் பீல்டிங்கை தேர்வு செய்ததால் தற்போது பெங்களூர் அணி பேட்டிங்கை தயாராகி வருகிறது.

RCB

- Advertisement -

கடந்த போட்டியில் சென்னை அணிக்கு எதிராக பேட்டிங்கில் படு மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பெங்களூர் அணி சென்னை அணிக்கு எதிராக மோசமான தோல்வியை பெற்றது. இந்நிலையில் அந்த தவறுகளை திருத்திக்கொண்டு டெல்லி அணிக்கு எதிராக வெற்றி பெறும் நோக்கத்தில் பெங்களூர் அணி இன்று களமிறங்கியுள்ளது.

அதன்படி பெங்களூரு அணியில் இன்று இரண்டு முக்கிய மாற்றங்களை கேப்டன் கோலி செய்துள்ளார். கடந்த போட்டியில் சரியாக பந்து வீசாத சைனியை வெளியேற்றி அவருக்கு பதிலாக கூடுதல் பேட்ஸ்மேனாக ராஜட் பட்டிதார் சேர்க்கப்பட்டுள்ளார். அதுமட்டுமின்றி வெளிநாட்டு வீரர் கிறிஸ்டியனுக்கு பதிலாக ஆல்ரவுண்டர் டேனியல் சாம்ஸ் அணியில் இடம் பெற்றுள்ளார்.

Saini

இது அணிக்கு கூடுதல் பலம் தரும் என்பதால் இந்த மாற்றம் பெங்களூரு அணியில் செய்யப்பட்டுள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்று மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்ப கோலி முயற்சிப்பார். அதேவேளையில் கடந்த போட்டியில் சூப்பர் ஓவரில் வெற்றி பெற்ற டெல்லி அணி இந்த போட்டியிலும் வெற்றி பெற்று தங்கள் ஆதிக்கத்தை தொடர விரும்பும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

rcb 2

பெங்களூரு அணியின் பிளேயிங் லெவன் இதோ :

1)கோலி 2)படிக்கல் 3)பட்டிதார் 4)மேக்ஸ்வெல் 5)ஏ.பி.டி 6)சுந்தர் 7)டேனியல் சாம்ஸ் 8)சிராஜ் 9)சாஹல் 10)ஹர்ஷல் பட்டேல் 11)ஜேமிசன்

Advertisement