சி.எஸ்.கே அணிக்கெதிரான இந்த போட்டியில் தோற்றாலும் இவரை டீம்ல இருந்து தூக்க மாட்டோம் – கேப்டன் கோலி சப்போர்ட்

Kohli
- Advertisement -

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற போட்டி ரசிகர்களுக்கு சிறந்த ஒரு போட்டியாக அமைந்தது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய சென்னை அணி 19 ஓவரில் வரை சாதாரணமாக விளையாடி இருந்தாலும் 20 ஆவது ஓவரில் ஜடேஜாவின் அதிரடி காரணமாக 37 ரன்கள் குவிக்க இறுதியில் 191 ரன்களை குவித்தது. அதன் பின்னர் 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணி பவர்ப்ளே ஓவர்களில் சிறப்பான துவக்கத்தை கண்டது.

- Advertisement -

இருப்பினும் கோலி மற்றும் படித்தல் ஆகியோரது விக்கெட்டை இழக்க அடுத்தடுத்து மளமளவென விழுந்த விக்கெட்டுகள் காரணமாக 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 122 ரன்களை மட்டுமே குவித்தது. இதன்காரணமாக 69 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி தோல்வியை தழுவியது. இந்த போட்டியில் முதல் 3 ஓவர்களில் சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை கைப்பற்றிய ஹர்ஷல் படேல் வீசிய கடைசி ஓவரில் 37 ரன்கள் விட்டுக்கொடுத்து பெங்களூர் அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தார்.

இந்நிலையில் போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி பல்வேறு விடயங்களை பகிர்ந்து கொண்டார். இதுகுறித்து அவர் கூறுகையில் : இந்த போட்டியை நாங்கள் சரியான கண்ணோட்டத்துடனேயே அணுகுகிறோம். இந்த போட்டியில் பெற்ற தோல்வியின் மூலம் சில பாசிட்டிவான விஷயங்களை நாங்கள் எடுத்துக் கொள்ள இருக்கிறோம். இதுபோன்ற ஒரு ஆட்டம் இந்த தொடரின் ஆரம்பத்திலேயே நடந்து இருப்பதால் பல்வேறு விடயங்களை இந்த போட்டியில் இருந்து கற்றுக் கொண்டுள்ளோம்.

harshal 1

நாங்கள் இந்த போட்டியில் துவக்கத்தில் சரியாகவே செயல்பட்டோம். ஆனால் இறுதியில் அனைத்தும் ஒரே வீரரால் மாறியது. எங்களது அணியின் பந்து வீச்சாளரான ஹர்ஷல் பட்டேல் இந்த போட்டியில் சிறப்பாக பந்து வீசினார். கடைசி ஒரு ஓவரில் ரன்களை விட்டுக்கொடுத்ததன் காரணமாக அவரை அணியில் இருந்து நீக்க முடியாது. அவரை நாங்கள் தொடர்ந்து அணியில் வைத்திருப்போம். அவர் துவக்கத்தில் வீழ்த்திய 2 விக்கெட்டுகளால் தான் ஆட்டத்தின் மொமண்டம் மாறியது.

Harshal

கடைசி ஓவரில் ஜடேஜா விளையாடிய ஆட்டம் எங்களை தோல்வியின் பாதைக்குத் திரும்பியது நானும் படிக்கலும் இந்த போட்டி துவங்கிய விதம் சிறப்பாகவே இருந்தது. எங்களது அணியின் பேட்டிங் ஆர்டர் சிறப்பாக உள்ளது என்ற நம்பிக்கை என்னிடம் உள்ளது. இருந்தாலும் சில இடத்தில் நாங்கள் பேட்டிங்கில் ரன்களை குவிக்க தவறிவிட்டோம் என்று தோல்வி குறித்து கோலி பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement