மும்பைக்கு எதிரான போட்டியில் ரகானேவிற்கு 12 லட்சம் அபராதம்..! என்ன காரணம் தெரியுமா..?

Rahane
- Advertisement -

நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 47 லீக் போட்டி நடைபெற்றது., இந்த போட்டியில் ராஜஸ்தான் மற்றும் மும்பை அணி மோதியது. இந்த போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது. மேலும் இந்த போட்டியில் தாமதமாக பந்து வீசியதற்காக ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரஹானேவிற்கு அபராதம் விதிக்கபட்டுள்ளது.

Rahane

- Advertisement -

இரு அணிகளுமே வெற்றிபெற்றே ஆகா வேண்டும் என்று கட்டாயத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் , முதலில் களமிறங்கிய மும்பை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்களை எடுத்து. அந்த அணியில் அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர்களான உமேஷ் குமார் 38 ரன்களும், இவன் லீவிஸ் 60 ரன்களும் எடுத்திருந்தனர். பின்னர் 169 எடுத்தால் வெற்றி என்று களமிறங்கியது ராஜஸ்தான் அணி.

ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரரான அர்ச்சி சோர்ட் 4 ரங்களில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து ஆடிய ஜோஸ் பட்லர் 53 பந்துகளில் 94 ரன்களை எடுத்தார். அவருக்கு ஜோடியாக ஆடிய அந்த அணியின் கேப்டன் அஜிங்கிய ரஹானேவும் பட்லருக்கு பேட்டிங் ஆதரவை அளித்து ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு வழி வகுத்தார். இறுதியில் 18 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே பறிகொடுத்து வெற்றி பெற்றது.

Rahane

இந்த போட்டியின் போது முதலில் பந்துவீசிய ராஜஸ்தான் அணி பந்துவீச தாமதம் செய்ததால், அந்த அணியின் கேப்டன் அஜிங்கிய ரஹானேவிற்கு 12 லட்ச ரூபாய் அபராதத்தை விதித்துள்ளது. ஏற்கனவே இந்த ஐ.பி.எல் தொடரில் பெங்களூரு அணி விளையாடி ஒரு போட்டியில், அந்த அணி பந்து வீச்சில் தாமதம் செய்ததால் அந்த அணியின் கேப்டன் விராட் கோலிக்கு அபராதம் விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement