தோணி மற்றும் வாட்சன் அதிரடியில் சென்னை த்ரில் வெற்றி…தோல்வி குறித்து பேசிய ஷ்ரேயாஸ் ஐயர் !

- Advertisement -

நேற்று புனேயில் நடந்த ஆட்டத்தில் சென்னை அணி விறுவிறுப்பான ஆட்டத்தில் டெல்லி அணியை வீழ்த்தியது இதன் மூலம் நடந்து முடிந்த 8 போட்டிகளில் 6 போட்டிகளில் வெற்றிபெற்று 12 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதல் இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது சென்னை ஆணி. நேற்று நடந்த இந்த போட்டியில் முதலில் களமிறங்கிய சென்னை அணி 4 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்களை குவித்தது. மேலும் அந்த அணியின் வாட்சன் 70 ரங்களும், தோனி 51 ரன்களும் , ராயுடு 41 ரன்களையும் விளாசி சென்னை அணி ரன்களை குவிக்க உதவினார்கள்.

- Advertisement -

இதன் பின்னர் களமிறங்கிய டெல்லி அணி நன்றாக விளையாடி 198 ரன்களை குவித்து வெற்றிக்கு மிக வருகில் வந்து கோட்டை விட்டது. மேலும் அந்த அணியின் ரஷாந்த் பண்ட (79) மற்றும் விஜய் ஷங்கர் (54) இருவரும் அதிரடியாக ஆடினார்.பின்னர் இறுதியில் சென்னை அணி எப்படியோ தட்டி தடுமாறி வெற்றி பெற்றது. போட்டி முடிந்ததும் பேசிய தோனி ” t20 போட்டிகள் என்பது மிகப்பெரிய வேலைப்பளு கொண்ட ஒரு ஆட்டம் இல்லை ,அது சற்று சமாளிக்க கூடிய ஒரு விஷயம் தான். அணியில் சிறந்த தொடக்கம் என்பது மிக முக்கியமான விஷம், ரன் எடுப்பதையும் தாண்டி இரு வீரர்களின் கூட்டு என்பதும் மிக முக்கியம்.

என்னை நானே பேட்டிங் வரிசையில் 5 வது இடத்தில உட்படுத்திக்கொண்டேன், மேலும் போட்டியின் 8 முதல் 10வது ஒவேரில் ஆடுவது மிகவும் ஸ்வாரஸ்யமாக இருக்கும், ஏனெனில் பந்து வீசும் பந்துவீச்சாளருக்கு நாம் எப்போது பெரிய ஷாட்டை அடிக்க பேட்டை ஓங்குவோம் என்பது தெரியாமல் குழம்பிவிடுவார்கள். மேலும் இந்த போட்டியில் சாம் பில்லிங்கிற்க்கு ஒய்வு கொடுக்கலாம் என்று எண்ணினேன். மேலும் மிடில் ஆர்டரில் உள்ள அம்பதி ராயுடு சிறப்பாக விளையாடி வருகிறார். மேலும் அவர் எந்த இடத்தில் இறக்கி விட்டாலும் ரன்களை குவித்து விடுவார்.

delhi

அணியின் வேக பந்து வீச்சாளராக இங்கிடி தென்னாப்ரிக்கா அணியிலிருந்தே நன்றாக ஆடிவருகிறார். அவர் உயரமாக இருப்பதால் அவர் பௌன்செர் பந்துகளை போட வசதியாக இருக்கிறது. ஆனால் போட்டியின் கடைசி 5 ஓவர்களில் அவர் நன்றாக பந்து வீசுவதில்லை . ஒருவேளை நாங்கள் இறுதி போட்டிக்கு சென்று விட்டால்,சிறிய மைதானத்தில் நடக்க இருக்கும் அந்த போட்டியில் சிறிதளவு தவறுகள் கூட நடக்க வாய்ப்பில்லை “என்று தோனி கூறியிருந்தார்.

Advertisement