ஆஷஸ் தொடரை விட இந்த தொடர் தான் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்படும் தொடர் – இன்ஜமாம் உல் ஹக் கருத்து

Inzamam
Advertisement

இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் இரு தரப்பில் தொடரில் விளையாடி எட்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இவ்விரு அணிகள் இடையே போட்டி தற்போது நடைபெறுகிறது என்றால் அது ஐசிசி நடத்தும் தொடர்களில் மட்டும்தான் மற்றபடி இந்திய அணி பாகிஸ்தானுக்கோ, அல்லது பாகிஸ்தான் அணி இந்தியாவிலோ சுற்றுப்பயணம் மேற்கொண்டு தொடர்களை விளையாடுவதில்லை.

Pak

இரு நாட்டிலும் உள்ள அரசியல் பிரச்சினை காரணமாக தொடர்கள் நடைபெறாமல் இருந்து வருகிறது. இருப்பினும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஐசிசி தொடர்களில் மோதிக்கொள்ளும் போது அந்த போட்டி ரசிகர்கள் இடையே பரபரப்பான ஒரு போட்டியாக பார்க்கப்படும். இந்நிலையில் தற்போது பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனான இன்சமாம் உல் ஹக் இவ்விரு அணிகளுக்கும் இடையே மீண்டும் போட்டிகள் தொடங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

மேலும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான தொடர் ஆஷஸ் தொடரை விட மிகப் பெரியது என்று அவர் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : இந்தியா பாகிஸ்தான் சீரியஸ் ஆஷஸ் தொடரை விட ரசிகர்கள் மத்தியில் அதிகம் ரசிக்கப்படும் ஒரு தொடராக பார்க்கப்படுகிறது. ஏனெனில் இரு அணிகளும் சிறந்த வீரர்கள் மற்றும் சிறந்த போட்டி இருப்பதால் இந்தத் தொடரை காண ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர்.

Pak

அதேபோன்று ஆசியா கோப்பையிலும் இந்தியா-பாகிஸ்தான் மோதிக்கொள்ளும் போது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகம் இருக்கும் என்று கூறியுள்ளார். நாங்கள் விளையாடிய காலத்தில் எப்போதெல்லாம் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொள்கிறதோ அப்போதெல்லாம் ஒரு நல்ல உணர்வு ஏற்படும். அந்த தொடர்களில் இளம் வீரர்கள் சீனியர் வீரர்களிடமிருந்து அதிகம் கற்றுக் கொள்வார்கள். சச்சின் டெண்டுல்கர், சௌரவ் கங்குலி, ஆசாருதீன் ஜாவித் மியான்மத் ஆகிய இந்திய அணியின் சீனியர் வீரர்கள் இளம் வீரர்களுக்கு நிறையவே கற்றுக் கொடுத்துள்ளனர்.

India v Pakistan

அதேபோன்று இந்தியா பாகிஸ்தான் போட்டி என்றால் மைதானத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. எனவே இரு நாடுகளுக்கும் இடையேயான போட்டி அடிக்கடி நடைபெறவேண்டும் என்றும் ஆசிய கோப்பை மட்டுமல்லாமல் இரு நாடுகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடர் மீண்டும் நடைபெற வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

Advertisement