இந்திய அணியின் இடதுகை சேவாக் இவர்தான். கொஞ்சம் கூட இவருக்கு பயமில்லை – இன்ஜமாம் பாராட்டு

Inzamam
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முக்கியமான 4ஆ வது டெஸ்ட் போட்டியில் அக்சர் பட்டேல், ரவிச்சந்திரன் அஸ்வின் , வாஷிங்டன் சுந்தர் மற்றும் ரிஷப் பண்ட் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர். அதில் குறிப்பாக ரிஷப் பண்ட் மிக அதிரடியாக ஆடி சதம் அடித்து இந்திய அணியை மீட்டெடுத்து வந்த விதம் அனைத்து கிரிக்கெட் வல்லுனர்களையும் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

pant 2

- Advertisement -

ரிஷப் பண்ட் ஆட்டத்தைப் பார்க்கும் பொழுது ஆடம் கில்கிறிஸ்ட் ஆடுவது போல் உள்ளது என்று ஒரு பக்கம் ஜாம்பவான் வீரர்கள் கூறிவரும் வேளையில் மறுபக்கம் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் இன்சமாம் உல் ஹக் ரிஷப் பண்டை இடதுகை சேவாக் என கூறியுள்ளார். ரிஷப் பன்டின் ஆட்டம் மிகவும் வியக்க வைக்கிறது என்று கூறத் தொடங்கிய இன்சமாம், 4வது போட்டியில் குறிப்பாக இந்தியா ஒரு நேரத்தில் 6 விக்கெட்டுகளை பறிகொடுத்து 146 என்கிற இக்கட்டான நிலையில் இருந்தபொழுது தடுப்பாட்டம் போடாமல் அதிரடியான ஆட்டத்தை ஆடி சதமடித்த விதம் என்னை வெகுவாக கவர்ந்துள்ளது என்று கூறினார்.

விரேந்திர சேவாக் உடன் நான் போட்டியில் விளையாடி உள்ளேன். அவர் பந்தை எப்படி அணுகுவார் என்பது எனக்கு நன்றாக தெரியும்.ரிஷப் பண்டின் ஆட்டத்தை கடந்த சில வருடங்களாக பார்த்து வருகிறேன். ஆஸ்திரேலியாவில் தொடங்கி தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்து தொடர் வரை அவரது ஆட்டம் அதிரடி ஆகவே உள்ளது என்று கூறினார். இந்திய அணியின் அடுத்த சச்சின் மட்டும் டிராவிட் யார் என்றால் அது ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி என்பதில் சந்தேகமில்லை.

pant 1

ஆனால் அடுத்து சேவாக் யார் என்று என்னைக் கேட்டால் அது பண்ட்டு தான். ரிஷப் பண்டின் ஆட்டத்தை காண்கையில் சேவாக் இடதுகையில் ஆடுவதுபோல் இருக்கின்றது. ஏனெனில் சேவாக் ஆட வந்துவிட்டால் மைதானம் மற்றும் சுற்றியுள்ள வீரர்கள் விளையாட்டின் தட்பநிலை இவை எதையும் கணக்கில் கொள்ள மாட்டார். வந்த வேகத்தில் மளமளவென ரன்களை குவித்து தள்ளுவார். அதே அணுகுமுறை ரிஷப் பண்டின் ஆட்டத்திலும் வெளிப்படுகிறது.

Pant

எவ்வளவு பெரிய பவுலராக இருந்தாலும் மிக சாமர்த்தியமாக அதிரடி சாட்டுகளை ஆடி வருகிறார்.
ஆண்டர்சனின் ஓவரில் இவர் அடித்த ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட் பவுண்டரி அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு. இந்திய வீரர்களுக்கு புதிய சேவாக் கிடைத்துவிட்டார். ஆனால், இந்தப் புதிய சேவாக் இடது கையில் விளையாட கூடியவர் ஆவார் என்று ரிஷப் பண்டை புகழ்ந்து பேசியுள்ளார் இன்சமாம் உல் ஹக்.

Advertisement