
இந்திய அணி கிரிக்கெட் ஆடத் தொடங்கிய காலத்திலிருந்தே பேட்ஸ்மேன்களுக்கு பெயர் போனதாக இருந்தது. கிரிக்கெட் ஆடத் துவங்கிய காலத்திலிருந்து பல ஜாம்பவான்கள் பேட்ஸ்மேன்கலாக உருவாகியுள்ளனர்.சுனில் கவாஸ்கர், சச்சின் டென்டுல்கர், மகேந்திர சிங் தோனி, விராத் கோலி, ரோகித் சர்மா, வீரேந்தர் சேவாக், ராகுல் டிராவிட் என ஜாம்பவான்களின் பெயரை அடுக்கிக் கொண்டே போகலாம்.
இதே நேரத்தில் பாகிஸ்தானில் இந்தியாவை போலல்லாமல் பந்துவீச்சாளர்கள் அதிகம் உருவாகினார். அந்த அணியிலும் வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ், சக்லைன் மோஸ்டாக் போன்ற ஜாம்பவான் பந்துவீச்சாளர்கள் உருவாகினர். இது எப்படி என்று யாருக்கும் தற்போது வரை தெரியவில்லை. ஆனால் இந்தியா என்றால் பேட்ஸ்மேன்கள், பாகிஸ்தான் என்றால் பந்துவீச்சாளர்கள் என்றுதான் உலக கிரிக்கெட் நினைத்துக் கொண்டிருக்கிறது.
தற்போது இதுகுறித்து பாகிஸ்தான் அணியின் தேர்வுக்குழு தலைவராக இருந்த இன்சமாம் உல் ஹக் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : நாங்கள் எப்போது இந்தியாவிற்கு எதிராக விளையாடினாலும் இந்தியாவின் பேட்ஸ்மேன்கள் மிக வலிமையாக இருப்பார்கள். நாங்கள் 40 ரன்கள் அடிக்கும் போது அவர்கள் 100 ரன்கள் விளாசுவார்கள். இது எப்படி என்று எங்களுக்கு தெரியவில்லை.
ஆனால் எங்கள் பந்துவீச்சாளர்கள் நன்றாக பந்து வீசுவார்கள். அதே நேரத்தில் நாங்கள் அடிக்கும் 40 ரன்கள் அணிக்காக இருக்கும். அவர்கள் அடிக்கும் 100 ரன்கள் தங்களது தனிப்பட்ட நலனுக்காக இருக்கும் என்று சர்ச்சைக்குரிய பதிலை தெரிவித்துள்ளார் இன்சமாம் உல் ஹக். மேலும் இந்திய வீரர்கள் எப்போதும் அணிக்காக ரன் குவிக்காமல் தங்களது தனிப்பட்ட சாதனைக்காகவே ரன்களை குவிப்பார்கள்.
அதுமட்டுமின்றி நன்றாக விளையாடவில்லை என்றால் அவர்களை அணியில் இருந்து நீக்கிவிடுவார்கள் என்ற பயத்துடனும் அவர்கள் விளையாடுவார்கள் என்று சர்ச்சைக்கு உரிய விதத்தில் இன்ஜமாம் உல் ஹக் கூறியுள்ளார். இவரின் இந்த கருத்துக்கு தற்போது எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஏனெனில் இந்தியிற் வீரர்கள் நன்றாக விளையாடினாலும் இதுபோன்ற சர்ச்சை கருத்துக்களை கூறுவது தவறு என்றும் ரசிகர்கள் கூறிவருகின்றனர்.
அவரின் இந்த கருத்துக்கு முரணான விமர்சனங்கள் அவர்மீது எழுந்துள்ளது. அதுமட்டுமின்றி எப்போது இந்திய அணி சிறப்பான நிலையில் இருந்தாலும் இதுபோன்ற கருத்துக்களை கூறிவரும் பாகிஸ்தான் வீரர்களுக்கு இந்திய ரசிகர்கள் தங்களது கருத்துக்களின் மூலம் பதிலடி கொடுத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.