டெஸ்ட் கிரிக்கெட்டை பொறுத்தவரை இவரே இந்திய அணியின் சாதனை நாயகன் – இன்சமாம் ஓபன் டாக்

Inzamam
- Advertisement -

1970 மற்றும் 80களில் இந்தியாவின் ஜாம்பவானாக திகழ்ந்தவர் சுனில் கவாஸ்கர் . இவர்தான் உண்மையான லிட்டில் மாஸ்டர் என்ற என்ற பட்டத்தைப் பெற்றவர். சச்சின் டெண்டுல்கருக்கு முன்னர் இவர்தான் இந்தியாவின் பேட்டிங் ஜாம்பவான். டெஸ்ட் போட்டிகளில் கிரிக்கெட் வரலாற்றிலேயே 10 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீரர் இவர் தான்.

Gavaskar

- Advertisement -

இந்திய அணிக்காக மொத்தம் 125 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 34 சதங்கள் அடித்து 10,122 ரன்கள் குவித்தார். அப்போதெல்லாம் 10 ஆயிரம் ரன்கள் அடிப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. இந்நிலையில் சுனில் கவாஸ்கர் குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் இன்சமாம் உல் ஹக் பேசியுள்ளார். அவர் கூறுகையில்…

கவாஸ்கர் காலத்திலும் அதற்கு முன்னர் இருந்த காலத்திலும் பல தலைசிறந்த வீரர்கள் இருந்தார்கள் .விவியன் ரிச்சர்ட்ஸ், ஜாவித் மியான்தத், கேரி சோபர்ஸ், டான் பிராட்மேன் போன்றவர்கள் 10 ஆயிரம் ரன்கள் அடித்தது கிடையாது.

gavaskar

ஆனால் இந்த காலகட்டத்தில் அதிக அளவில் டெஸ்ட் போட்டிகள் நடைபெறுகிறது. இதன் காரணமாக 10 ஆயிரம் ரன்கள் எளிதாக அடித்து விடுகிறார்கள். என்னை கேட்டால் சுனில் கவாஸ்கர் அடித்துள்ள 10,000 ரன்கள் தற்போதைய காலத்தில் 15 ஆயிரம் ரண்களுக்கு சமம் அல்லது அதைவிட அதிகமாகத்தான் இருக்கும் குறைவாக ஒருபோதும் இருக்க முடியாது என்று கூறியுள்ளார் இன்சமாம் உல் ஹக்.

ஏற்கனவே ஒருமுறை தனது பேட்டிங் பார்மை இழந்து தவித்த இன்சமாம் உல் ஹக் கவாஸ்கரிடம் ஆலோசனை பெற்ற பிறகே தான் மீண்டும் சிறப்பாக விளையாட துவங்கியதாக அவரே கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement