நெட் பிராக்டீஸ்ல அடிக்குற மாதிரி அடிச்சி நொறுக்கிட்டாரு – இந்திய வீரரை புகழ்ந்த இன்ஜமாம் உல் ஹக்

Inzamam
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி செப்டம்பர் 2-ஆம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணியானது 191 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்த போட்டியில் இஷாந்த் சர்மாவிற்கு பதிலாக களமிறங்கிய ஷர்துல் தாகூர் பேட்டிங்கில் தனது அதிரடி மூலம் அரை சதம் விளாசி அசத்தினார்.

indvseng

- Advertisement -

ஒருபக்கம் இங்கிலாந்து வீரர்கள் இந்திய அணியின் பேட்ஸ்மேன்களை அடுத்தடுத்து ஆட்டமிழக்க வைத்து வெறியேற்ற ஒரு கட்டத்தில் இந்திய அணியானது 127 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தவித்தது. அந்த நேரத்தில் களமிறங்கிய ஷர்துல் தாகூர் தனது அபாரமான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 36 பந்துகளில் 57 ரன்கள் விளாசினார்.

இதில் மூன்று பிரமாண்டமான சிக்ஸர்கள் மற்றும் 7 பவுண்டரிகள் அடங்கும். இந்நிலையில் ஷர்துல் தாகூரின் இந்த சிறப்பான இன்னிங்சை பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனான இன்சமாம் உல் ஹக் பாராட்டியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

thakur 1

இந்திய அணி 191 ரன்களுக்கு சுருண்டது குறைவான ஸ்கோராக தெரியலாம். ஆனால் இது போன்ற கண்டிஷன்களில் இது மோசமான ஸ்கோர் கிடையாது. டெஸ்ட் கிரிக்கெட்டில் நீண்ட காலத்திற்குப் பிறகு இப்படி ஒரு மைதானத்தை நான் பார்க்கிறேன். நிச்சயம் பேட்டிங் செய்வதற்கு கடினமான மைதானமாக ஓவல் இருகிறது. ஆனால் இப்படிப்பட்ட ஒரு பிட்ச்சிலும் ஷர்துல் பேட்டிங் செய்த விதம் சிறப்பானது.

Thakur-3

முன்னணி பேட்ஸ்மேன்கள் ஸ்கோர் செய்ய திணறிய நிலையில் ஷர்துல் தாகூர் வந்ததும் பெரிய ஷாட்டுகளை அடித்து விளையாடினார். இது அவரது பேட்டிங் மீது அவர் வைத்துள்ள நம்பிக்கையை வெளிக்காட்டுகிறது. அவர் விளையாடும் போது நெட் ப்ராக்டீஸ்ஸில் பந்தை அடித்து விளையாடுவது போன்று அவ்வளவு எளிதாக விளையாடினார் என இன்சமாம் உல் ஹக் அவரை புகழ்ந்து கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement