இதுபோன்ற வீரர்களை நான் பார்த்தது கிடையாது. மீண்டும் இந்திய அணியை புகழ்ந்த – இன்ஜமாம் உல் ஹக்

Inzamam
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆனது ஆகஸ்ட் 4ஆம் தேதி துவங்கியது. இந்த முதலாவது போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 183 ரன்களை குவிக்க அதனை தொடர்ந்து இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 278 ரன்கள் குவித்தது. பிறகு மீண்டும் இரண்டாவது இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து அணி ஆனது 303 ரன்களை குவித்தது.

Kohli

- Advertisement -

இதன் காரணமாக 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி 4-வது நாள் ஆட்ட நேர முடிவில் 51 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்து இருந்தது. இந்நிலையில் ஐந்தாவது நாள் போட்டி முழுவதும் மழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் முடிவுக்கு வந்ததால் போட்டி டிராவில் முடிந்தது.

இந்த போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் பும்ரா, ஷமி, சிராஜ் மற்றும் ஷர்துல் தாகூர் ஆகியோர் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தியதன் காரணமாக அவர்களுக்கு தற்போது பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இந்நிலையில் இந்தப் இந்திய அணியின் இந்த அசத்தலான ஆட்டத்திற்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனான இன்சமாம் உல் ஹக் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில் : இங்கிலாந்து போன்ற அணிக்கு எதிராக முதல் நாளிலேயே இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினர். பொதுவாக இங்கிலாந்து போன்ற நாடுகளில் முதல் நாளில் பந்துவீச்சாளர்கள் லைன் அன்ட் லென்ந்த்தில் பந்துவீச்சை பிடிக்க சிரமப்படுவார்கள். ஆனால் இந்திய வீரர்கள் எந்தவித தடுமாற்றமும் இன்றி சிறப்பாக பந்து வீசி விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

Siraj-1

ஜோ ரூட் சதம் விளாசி கூட இந்திய அணியின் பந்து வீச்சாளர்களை தடுமாற்றத்துடன் தான் எதிர்கொண்டார். பும்ரா,சிராஜ், ஷமி போன்ற வீரர்கள் சிறப்பாக பந்து வீசி வெளிப்படுத்தினர். அவர்களது ஆட்டத்தை பார்ப்பதற்கு பிரம்மிப்பாக இருந்தது. இதுவரை இந்திய அணியில் நான் இதுபோன்ற பவுலர்களை பார்த்ததே இல்லை என்று தனது கருத்தினை இன்சமாம் உல் ஹக் வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Advertisement