சர்வதேச கேப்டன்களில் அதிக சம்பளம் பெரும் கேப்டன் பட்டியல். கோலி முதலிடம் இல்லை – வியக்க வைக்கும் தகவல் இதோ

Captains
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் சாதாரண வீரர்களுக்கும், கேப்டனுக்கும் எப்போதும் வித்தியாசம் இருக்கும். இருவருக்கும் பகிரப்படும் வேலைப்பளுவில் வித்தியாசம் இருப்பது போல அவர்களுக்கு கொடுக்கப்படும் சம்பளத்திலும் மிகப் பெரிய வித்தியாசம் இருக்கிறது. ஒவ்வொரு கிரிக்கெட் வாரியமும் தங்களது கேப்டன்களுக்கு சாதாரண வீரரை விட அதிக சம்பளத்தை கொடுத்து வருகின்றனர்.

விராட் கோலி சென்ற வருடம் 197 கோடிகள் சம்பாதித்து இருந்தாலும் அதிக சம்பளம் பெறும் கேப்டன்கள் பட்டியலில் இவர் முதலிடத்தை பிடிக்கவில்லை. அதற்கு நேர் மாறாக இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் ஜோ ரூட் முதலிடத்தை பிடித்துள்ளார்.

- Advertisement -

தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சம்பளம் பெறும் கேப்டன்கள் பட்டியலை காண்போம்.

Malinga

திமுத் கருணரத்னே – 71.32 லட்சம், லசித் மலிங்கா – 50 லட்சம் :

- Advertisement -

இலங்கை அணிக்கு டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் கடந்த 2 ஆண்டுகளாக பணியாற்றி வரும் திமுத் கருணரத்னே ஆண்டுக்கு கேப்டனாக மட்டும் 71.32 லட்சம் சம்பளமாக பெற்று வருகிறார். அதேநேரத்தில் அந்த அணிக்கு டி20 போட்டிகளில் கேப்டனாக இருக்கும் லசித் மலிங்கா 50 லட்சம் சம்பளமாக பெறுகிறார்.

டிம் பெய்ன் மற்றும் ஆரோன் பின்ச் 4.78 கோடிகள் :

- Advertisement -

#ஆஸ்திரேலிய அணிக்கு டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக இருந்து டிம் பெய்ன் வருடத்திற்கு 4.78 கோடியும், டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் கேப்டனாக இருந்து வரும் ஆரோன் பின்ச் 4.78 கோடியாய் சம்பளமாக பெற்று வருகின்றனர். ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியத்தை பொருத்தவரை கேப்டனாக இருந்தாலே சரிசமமான தொகை வழங்கப்படுகிறது.

faf

பாப் டு பிளசிஸ் 3.2 கோடி, குவின்டன் டி காக் 2.5 கோடி :

- Advertisement -

தென் ஆப்பிரிக்க அணிக்கு டெஸ்ட் போட்டிகளில் கடந்த பல வருடங்களாக கேப்டனாக இருந்து வரும் டூப்ளீஸ்ஸிஸ் வருடத்திற்கு 3.2 கோடிகள் சம்பளமாக பெற்று வருகிறார். அதே நேரத்தில் இளம் வீரரான குவின்டன் டி காக் டி20 போட்டிகளில் கேப்டனாக பணியாற்றி வருகிறார். இதற்கு அவர் வருடத்திற்கு 2.5 கோடி சம்பளமாக பெற்று வருகிறார்.

கேன் வில்லியம்சன் 3.17 கோடி :

நியூசிலாந்து அணியும் தற்போது இந்திய அணியின் பாணியை கடைப்பிடித்து வருகிறது. அதாவது அனைத்து வகையான போட்டிகளுக்கும் ஒருவரையே கேப்டனாக நியமித்துள்ளது.
டெஸ்ட், டி20 மற்றும் ஒருநாள் என மூன்று இருக்கும் கேப்டனாக இருக்கும் கேன் வில்லியம்சன் 3.17 கோடி ரூபாய் சம்பளம் பெற்று வருகிறார்

பாபர் அசாம் 66 லட்சம், சர்பராஸ் அகமது 66 லட்சம், அசார் அலி 44 லட்சம் :

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சற்று வித்தியாசமாக செயல்படுகிறது. ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் கேப்டனாக இருக்கும் பாபர் அசாம் மற்றும் சர்பராஸ் அஹமது ஆகியோருக்கு 66 லட்சமமும், வேலைப்பளு அதிகமாக இருக்கும் டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக வழிநடத்தும் அசார் அலிக்கு 44 லட்சம் கொடுத்து வருகிறது.

Kohli-4

விராட் கோலி 7 கோடி :

கிரிக்கெட்டில் அதிகமாக சம்பாதிக்கும் வீரர் விராட் கோலி. சென்ற வருடம் மட்டும் 197 கோடி ரூபாய் சம்பாதித்துள்ளார். ஆனால் அவருக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் கேப்டனாக பணியாற்றுவதற்கு வெறும் 7 கோடி தான் கொடுத்து வருகிறது . மீதம் அனைத்தும் விளம்பரங்களின் மூலம் சம்பாதித்துள்ளார் விராட் கோலி.

ஜோ ரூட் 8.15 கோடி, இயான் மார்கன் 2.56 கோடி :

ஆச்சரியமாக இந்த பட்டியலில் ஜோ ரூட் முதலிடம் பிடித்துள்ளார். பொதுவாக அதிகமாக சம்பாதிக்கும் விராட் கோலி தான் இந்த பட்டியலில் முதல் இடம் பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக இருக்கும் ஜோ ரூட்டுக்கு 8.5 கோடிகள் வருடாவருடம் சம்பளம் கொடுத்து வருகிறது . அதே நேரத்தில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் கேப்டனாக இருக்கும் இயான் மார்கன் 2.5 ஆயிரம் கோடி சம்பளம் பெற்று வருகிறார்.

Advertisement