காயம் காரணமாக இந்திய அணியில் இருந்து விலகிய முன்னணி வேகப்பந்து வீச்சாளர் – அதிகாரபூர்வ அறிவிப்பு

india

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக மும்பையில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை 2 – 1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதனை தொடர்ந்து தற்போது நாளை மறுதினம் சென்னையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விளையாட இந்திய அணி தயாராகி வருகிறது.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து ஏற்கனவே இந்திய அணியின் இடதுகை துவக்க ஆட்டக்காரரான ஷிகர் தவான் காயம் காரணமாக விலகினார். அவருக்கு பதிலாக மயங்க் அகர்வால் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தற்போது மேலும் இந்திய அணிக்கு ஒரு சறுக்கலாக இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான புவனேஷ்வர் குமார் காயம் காரணமாக ஒருநாள் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

புவனேஸ்வர் குமார் கடந்த 2018 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரின் போது ஏற்பட்ட காயத்தின் பிறகு கடந்த இரண்டு வருடங்களாக டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்காமல் இருந்து வருகிறார். இந்நிலையில் இங்கிலாந்தில் நடைபெற்ற உலக கோப்பை தொடரின் போது ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த சில தொடர்களாகவே புவனேஸ்வர் குமார் அணியில் இருந்து விலகி இருந்தார்.

Bhuvi-1

இந்நிலையில் தற்போது தான் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியுடன் இணைந்தார். இரண்டு டி20 போட்டியில் சிறப்பாக பந்துவீசிய புவனேஷ்வர் குமார் தற்போது பிரச்சனையில் மீண்டும் சிக்கியுள்ளார். அதன்படி அவருக்கு மீண்டும் அவருக்கு காயம் ஏற்பட்டு உள்ள காரணத்தினால் ஒருநாள் தொடரில் இருந்து விலகி அவர் சிகிச்சை மேற்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Bhuvi

கடந்த இரண்டு ஆண்டுகளாக காயத்தால் அவதிப்பட்டு வரும் புவனேஷ்வர் குமார் இந்திய தேசிய கிரிக்கெட் அகாடெமியின் கண்காணிப்பில் இருந்தும் இப்படி அவர் அவதிப்பட்டு வருவதால் ரசிகர்கள் நிர்வாகத்திற்கு எதிராக கடுமையான கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.