INDvsRSA : ஒருநாள் தொடரை எந்த சேனலில் பார்க்கலாம் – எத்தனை மணிக்கு போட்டிகள் துவங்கும்?

Bhuvi-1
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது தென்னாப்பிரிக்க நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்நாட்டு கிரிக்கெட் அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி முடித்துள்ளது. இதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது (ஜனவரி 19) நாளை முதல் துவங்கி நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான இந்திய ஒருநாள் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட ரோஹித் காயம் காரணமாக இத்தொடரில் இருந்து வெளியேறி உள்ளதால் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள கேஎல் ராகுல் தலைமையில் இந்திய அணி இந்த தொடரை எதிர்கொள்ள தயாராக உள்ளது.

Bhuvi

- Advertisement -

இந்நிலையில் இந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது எந்த மைதானத்தில் நடைபெறும்? இந்திய நேரப்படி எத்தனை மணிக்கு துவங்கும்? எந்த சேனலில் பார்க்கலாம்? என்பது குறித்த விவரத்தை தான் இந்த பதிவில் நாங்கள் உங்களுக்கு தொகுத்து வழங்கியுள்ளோம்.

அதன்படி இந்த தொடரின் முதல் ஒருநாள் போட்டி ஜனவரி 19-ஆம் தேதி புதன்கிழமை அன்று போலந்து பார்க் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. அதனை தொடர்ந்து 2-வது ஒருநாள் போட்டி ஜனவரி 21-ஆம் தேதி அதே போலந்து பார்க் மைதானத்தில் நடைபெறுகிறது. மேலும் ஜனவரி 23-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கேப்டவுன் மைதானத்தில் மூன்றாவது ஒருநாள் போட்டி நடைபெறுகிறது.

INDvsRSA

3 ஒருநாள் போட்டிகளுமே இந்திய நேரப்படி மதியம் சுமார் இரண்டு மணிக்கு (2pm) துவங்கும். அதேபோன்று இந்த போட்டிகள் அனைத்தையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி குழுமம் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது. அதுமட்டுமின்றி ஹாட்ஸ்டார் மூலமும் இந்த போட்டிகளை நீங்கள் கண்டு களிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதையும் படிங்க : தெ.ஆ மண்ணில் கே.எல் ராகுல் படைக்கவிருக்கும் சாதனை. முதல் ஆளே இவர்தானாம் – விவரம் இதோ

ஏற்கனவே தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக 2-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை இழந்த இந்திய அணியானது நிச்சயம் இந்த ஒருநாள் தொடரில் வெற்றி பெற்று அவர்களுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. அதோடு இந்திய அணியின் ஒருநாள் கேப்டனாக ராகுல் முதல் முறையாக செயல்பட இருப்பதால் அவர் மீது கூடுதல் கவனம் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement