IND vs RSA : 4 ஆவது போட்டி நடைபெறும் ராஜ்கோட் மைதானத்தில் இன்று போட்டி நடைபெறுவதில் – ஏற்பட்டுள்ள சிக்கல்

INDvsRSA
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் முதல் 3 ஆட்டங்கள் முடிவடைந்த வேளையில் 2 க்கு 1 என்ற கணக்கில் இந்திய அணி பின்தங்கியுள்ளது. அதனைத் தொடர்ந்து இன்று இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 4-வது டி20 போட்டி ராஜ்கோட் மைதானத்தில் இன்று நடைபெற உள்ளது.

toss

- Advertisement -

இந்த போட்டியில் வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றலாம் என்ற முனைப்புடன் தென்ஆப்பிரிக்கா அணி தீவிரமாக தயாராகி வருகிறது. அதே வேளையில் இந்த போட்டியில் வெற்றி பெறுவதன் மூலம் தொடரை சமன் செய்யலாம் என்ற நினைப்போடு இந்திய அணியின் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

ஏற்கனவே விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றதால் இன்றைய போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை சமன் செய்யும் என்று என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இந்நிலையில் இன்றைய போட்டி நடைபெறும் ராஜ்கோட் மைதானத்தில் நேற்று முழுவதும் பலத்த மழை பெய்துள்ளதால் இன்று மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

Rain

இதன் காரணமாக இன்றைய போட்டியில் நடப்பது நடைபெறுவதில் சிக்கல் ஏற்படலாம். இருப்பினும் மழை பெய்தாலும் அதற்கேற்றார் போல் ஓவர்கள் குறைக்கப்பட்டு நிச்சயம் போட்டி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் ஏதேனும் மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்த்தால் நிச்சயம் அணியில் மாற்றம் இருக்காது என்றே கூறப்படுகிறது.

- Advertisement -

ஏனெனில் முதல் 2 போட்டிகளிலும் தோல்வி அடைந்த இந்திய அணி 3-வது போட்டியில் அதே பிளேயிங் லெவனுடன் களமிறங்கி வெற்றி பெற்றதால் நிச்சயம் இன்றைய போட்டியிலும் அதே அணியுடன் தான் களமிறங்கும் என்றும் இந்திய அணியில் எந்த ஒரு மாற்றமும் இருக்காது என்று கூறப்பட்டுள்ளது. இன்றைய போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ :

இதையும் படிங்க : அதென்ன டபுள் ஹாட்ரிக் – சர்வதேச டி20 கிரிக்கெட்டில் டபுள் ஹாட்ரிக் எடுத்த – டாப் 4 பவுலர்கள் இதோ

1) ருதுராஜ் கெய்க்வாட், 2) இஷான் கிஷன், 3) ஷ்ரேயாஸ் ஐயர், 4) ரிஷப் பண்ட், 5) ஹார்திக் பாண்டியா, 6) தினேஷ் கார்த்திக், 7) அக்சர் படேல், 8) ஹர்ஷல் படேல், 9) ஆவேஷ் கான், 10) புவனேஷ்வர் குமார், 11) யுஸ்வேந்திர சாஹல்

Advertisement