யாரும் பயப்படாதீங்க. இன்னும் மேட்ச் ஸ்டார்ட் ஆகல. இத்தன மணிக்கு இந்த சேனல்ல லைவ்வா பாக்கலாம் – விவரம் இதோ

IndvsRsa
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று துவங்க உள்ளது. அதன்படி முதலாவது ஒருநாள் போட்டியில் இன்று இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் உள்ள தர்மசாலாவில் மோதுகிறது.

Practice

- Advertisement -

சமீபத்தில் நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற தொடரில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை இழந்த இந்திய அணி அதற்கு அந்த தோல்வியிலிருந்து வெளிவரும் விதமாக இந்த தொடரில் வெற்றியுடன் பயணிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் முதுகுவலி காயத்தினால் கடந்த பல மாதங்களுக்கு பிறகு மீண்டும் அணிக்கு திரும்பியுள்ள பாண்டியா இந்த போட்டியில் சிறப்பாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் ஷிகர் தவான் மற்றும் புவனேஸ்வர் குமார் ஆகியோரும் தங்களது தாக்கத்தை நிரூபித்தாக வேண்டும்.

dhawan 3

மேலும் அது மட்டுமின்றி நியூஸிலாந்து தொடர் முழுவதும் பிரகாசிக்க கேப்டன் கோலி இந்த தொடரில் மீண்டும் பார்முக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இவை அனைத்தையும் தாண்டி தற்போது போட்டிக்கு ஒரு பிரச்சினை யாதெனில் அங்கு நிலவும் சீதோஷ்ண நிலை தான்.

- Advertisement -

ஏனெனில் தர்மசாலாவில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது இன்று காலையும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதால் மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக அங்கு கூறப்படுகிறது.

iplstar

இந்த ஆட்டம் இந்திய நேரப்படி சரியாக 1:30 மணிக்கு தொடங்கும். இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ்(தமிழ்) சேனலில் நேரடியாக காணலாம். அதுமட்டுமின்றி ஹாட்ஸ்டார் ஆப்பின் மூலம் காணலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement