மீண்டும் இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர் : முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பாக் வாரியம்

Eshan-PCB
- Advertisement -

கிரிக்கெட் போட்டியில் மிகபெரிய அளவில் எதிர்பார்க்கப்படும் போட்டி என்றால் அது இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிதான். சமீப காலங்களாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஐசிசி தொடர்கள் மற்றும் ஆசிய கோப்பை தொடரில் மட்டும் விளையாடி வருவது வழக்கமாகி விட்டது. கடைசியாக இந்திய அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது 2008ஆம் ஆண்டு ஆசிய கோப்பை தொடருக்காக என்பது குறிப்பிடத்தக்கது.

Pak

- Advertisement -

அதேபோல பாகிஸ்தான் அணி 2012-13ஆம் ஆண்டில் இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தது. 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டி20 போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் ஒருநாள் போட்டி தொடரை 2-1 என்கிற கணக்கில் பாகிஸ்தான் அணி கைப்பற்றியது. டி20 தொடர் 1-1 என்கிற கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.

இந்நிலையில் 10 ஆண்டுகள் கழித்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை நடத்த முயற்சி நடந்து வருவதாக பாகிஸ்தான் தரப்பில் இருந்து செய்தி வந்துள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் ஹேசன் மணி கூறுகையில் : எல்லாம் சரியாக மற்றும் சுமூகமாக நடக்கும் பட்சத்தில் விரைவில் இந்த ஆண்டின் பிற்பாதியில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஆறு நாள் கால இடைவெளியில் நடைபெறும்.

Pakistan 1

அப்படி நடந்தால் பத்து ஆண்டுகள் கழித்து நடக்கும் முதல் சீட் பெல்ட் தொடராக இது அமையும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.அதேபோல் 2023 ஆம் ஆண்டு பாகிஸ்தான் ஆசிய கோப்பை தொடரை நடத்த இருக்கிறது.அதில் நிச்சயம் இந்திய அணி கலந்துகொள்ளும் அதில் எந்த சந்தேகமும் இல்லை.

India v Pakistan

டி20 தொடர் நடக்க இருக்கும் செய்தி ஒரு பக்கம் உறுதி என்ற நிலையில் இரு நாட்டு ரசிகர்களும் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளனர். மிக நீண்டகாலமாக கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு மேலாக நடக்காத விஷயம் இந்தாண்டு நடக்க போகிறது என்று மிகுந்த எதிர்பார்ப்புடன் ஆவலோடு இருக்கின்றனர்.

Advertisement