டெஸ்ட் சாம்பியன்ஷிப் : டாஸ் போடுவதிலேயே ஏற்பட்டுள்ள தாமதம். போட்டி இன்னும் ஸ்டார்ட் ஆகல – காரணம் இதுதான்

indvsnz
- Advertisement -

ஐசிசி நடத்தி வரும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி இன்று ஏஜஸ் பவுல் மைதானத்தில் இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு துவங்க இருந்தது. கடந்த சில மாதங்களாகவே இந்த இறுதிப்போட்டிக்காகவே ரசிகர்கள் காத்திருந்தனர். அதனால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தில் உள்ளது. ஆனால் தற்போது வரை இந்த போட்டிக்கான டாஸ் போடப்படவில்லை.

INDvsNZ

- Advertisement -

முதன்முறையாக ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட்டில் சுவாரஸ்யத்தை அதிகரிக்கவும், ரசிகர்களிடையே டெஸ்ட் கிரிக்கெட்டை மீண்டும் உயிர்ப்புடன் வைக்கவும் இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை அறிமுகப்படுத்தியது. கடந்த இரு ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த தொடரின் முதல் இரு இடங்களைப் பிடித்த இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் ஜூன் 18-ம் தேதி சவுதாம்ப்டன் நகரின் ஏஜஸ் போல் மைதானத்தில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த இறுதிப் போட்டிக்கான இரு அணிகளும் ஏற்கனவே இங்கிலாந்து வந்து பயிற்சியை முடித்து தற்போது தயார் நிலையில் இருக்க இன்று முதல் நாள் ஆட்டம் துவங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் கடந்த சில நாட்களாகவே மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை அறிக்கை தகவல்கள் வெளிவந்த நிலையில் இன்று கடந்த சில மணி நேரங்கள் ஆகவே மைதானத்தில் மழை பெய்து பெய்து வருகிறது.

ground rain

இதன் காரணமாக தற்போது முதல்நாளிலேயே போட்டி துவங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இன்னும் டாஸ் கூட போடப்படாத நிலையில் போட்டி தாமதமாகி உள்ளதால் நிச்சயம் இந்த போட்டி ரிசர்வ் டேவான ஆறாவது நாளுக்கும் செல்ல வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

ஏற்கனவே இந்த இறுதிப்போட்டியில் மழை காரணமாகவோ அல்லது மோசமான வானிலை காரணமாகவோ போட்டியில் தடை ஏற்பட்டால் அதற்கு ஏற்றாற்போல் ஆறாவது நாள் ரிசர்வ் டேவில் போட்டி நடைபெறும் என ஐ.சி.சி. கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement