இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஒருநாள் இந்திய நேரப்படி இத்தனை மணிக்கு ஆரம்பம் – முழு விவரம் இதோ

- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 5 – 0 என்ற கணக்கில் கைப்பற்றி நியூசிலாந்து அணியை வாஷ்அவுட் செய்து வரலாறு படைத்தது.

IndvsNz

- Advertisement -

அதனைத் தொடர்ந்து தற்போது 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நேற்று ஹேமில்டன் மைதானத்தில் துவங்கியது. இந்தப் போட்டியில் இந்திய அணி 347 ரன்கள் என்ற மிகப்பெரிய ரன்களை குவித்த பின்னரும் நியூசிலாந்து அணி அதனை எளிதாக சேஸிங் செய்து தொடரில் 1 – 0 என்ற நிலையில் முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில் இந்த தொடருக்கான ஒருநாள் போட்டிகளில் இந்திய நேரம் வெளியாகியுள்ளது அதன்படி போட்டி துவங்கும் நேரம் மற்றும் மைதானங்களை இந்த பதிவில் பார்க்கலாம். இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது போட்டி 8 ஆம் தேதி ஆக்லாந்து மைதானத்திலும், மூன்றாவது ஒருநாள் போட்டி 11 ஆம் தேதி மவுண்ட் மாங்கனி மைதானத்திலும் நடைபெற உள்ளது.

indvsnz

இந்த இரண்டு போட்டிகளிலும் இந்திய நேரப்படி காலை (7:30) ஏழு முப்பது மணிக்கு துவங்கும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனலிலும், ஹாட்ஸ்டார் ஆப்பிலும் கண்டுகளிக்கலாம்.

Advertisement