கோலியா..? தோனியா ..? அனல் பறக்கும் கால்பந்து போட்டி..! – இறுதியில் வென்றது யார் தெரியுமா..?

dhoni

தற்போது ரஸ்யாவில் நடைபெற்று வரும் உலக கால் பந்து தொடர் தான் உலகம் முழுவதும் அனைவராலும் கண்டுகளிக்கப்ட்டு வரும் விளையாட்டு போட்டியாக இருந்து வருகிறது. இந்நிலையில் இந்திய அணியில் உள்ள வீரர்கள் பயிற்சயின் போது இரு அணிகளாக பிரிந்து கால்பந்து போட்டி ஒன்றை விளையாடியுள்ளனர்.
Dhoni 1
இந்திய அணி இரண்டு டி20 போட்டிகளை கொண்ட தொடரில் பங்குபெற ஐயர்லாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. நேற்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டிக்கு முன்னதாக கிரிக்கெட் பயிற்ச்சியில் ஈடுபட்டிருந்த இந்திய அணி வீரர்கள் கால்பந்து பயிற்சயிலும் ஈடுபட்டிருந்தனர்.

அதில் தோனி தலைமையிலான ஒரு அணியும், கோலி தலைமையிலான மற்றுமொரு அணியும் விளையாடியது. இந்திய வீரர்கள் ஜாலியாக விளையாடிய இந்த போட்டியில் கோலி அணி 4 கோலை அடித்து வெற்றி பெற்றது. இதில் தோனி அணி வெறும் ஒரு கோலை மட்டுமே அடித்தது. இந்த போட்டிக்கு பின்னர் மீண்டும் வீர்ர்கள் அனைவரும் பயிற்சியில் ஈடுபட்டனர்.

இந்த கால்பந்து போட்டி குறித்து பேசிய இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவிக்கையில்”இந்த கால்பந்து போட்டி இரு அணி வீரார்களும் மகிழ்ச்சியாக எடுத்துக் கொண்டோம். இருப்பினும் இந்த போட்டி சவாலாகவும் , கடினமாகவும் இருந்தது” என்று கூறியுள்ளார். இந்திய அணியின் சிறந்த வீரரான கோலி கால்பந்து போட்டியில் ஒரு கோலை கூட அடிக்கமாட்டார் என்று யுவராஜ் சிங் சமீபத்தில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த போட்டியில் விராட் கோலி அணி தான் வெற்றிபெற்றுள்ளது.