இந்தியா மற்றும் இங்கிலாந்து ஒருநாள் தொடர் : இரு அணி வீரர்களும் கூட்டாக படைத்த உலகசாதனை – விவரம் இதோ

INDvsENG
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நேற்று புனே மைதானத்தில் முடிவடைந்தது. நேற்றைய பரபரப்பான மூன்றாவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதன் மூலம் இந்தத் தொடரை 2 க்கு 1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றி அசத்தியது. இந்த மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி சிறப்பாக விளையாடி 48.2 ஓவர்களில் 329 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

trophy

- Advertisement -

இந்திய அணி சார்பாக தவான் 67 ரன்களையும், ஹர்திக் பாண்டியா 64 ரன்களையும், பண்ட் 78 ரன்கள் குவித்து அசத்தினார்கள். அதன்பின்னர் 330 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இங்கிலாந்து அணி துவக்க வீரர்களை அடுத்தடுத்து இழந்தாலும் மலான் மற்றும் சாம் கரண் ஆகியோரது சிறப்பான ஆட்டம் காரணமாக ஒரு கட்டத்தில் வெற்றிக்கு அருகில் வந்தது. வெற்றிக்கு முக்கியமான அந்த கடைசி வரை தமிழக வீரரான நடராஜன் வீசினார்.

அந்த ஓவரில் 14 ரன்கள் தேவை என்ற நிலையில் முதல் பந்திலேயே மார்க் வுட் ரன் அவுட்டாக போட்டியில் பரபரப்பு அதிகரித்தது. எனினும் மீதமுள்ள 5 பந்துகளில் ஒரு பவுண்டரி உட்பட 5 ரன்கள் மட்டுமே சென்றதால் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் டெஸ்ட் தொடர், டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடர் என அனைத்தையும் இந்திய அணி தன் வசப்படுத்தியது.

pant 1

இந்நிலையில் இந்த தொடரில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் கூட்டாக ஒரு உலக சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளனர். அந்த சாதனை யாதெனில் இதுவரை இரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஒருநாள் தொடரில் அதிகபட்ச சிக்சர் அடித்த தொடராக இந்த தொடர் இடம் பெற்றுள்ளது. இந்த தொடரில் இந்தியா மற்றும் இங்கிலாந்து வீரர்கள் இணைந்து 70 சிக்ஸர்களை விளாசி உள்ளனர். இதில் இந்திய அணி வீரர்கள் 33 சிக்சர்களையும், இங்கிலாந்து அணி வீரர்கள் 37 சிக்சர்களையும் விளங்கியுள்ளனர்.

Krunal 2

இதன்மூலம் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் அதிகபட்ச சிக்சர்கள் விளாசிய தொடராக இந்த தொடர் சாதனை பெற்றுள்ளது. இதற்கு முன்னதாக நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் 57 சிக்சர்கள் அடிக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து 3-வது இடத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் 2017 ஆம் ஆண்டு மோதியபோது 56 சிக்சர்கள் விளாசப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement