இந்திய அணியின் 3 வகை கிரிக்கெட்டிலும் அசத்திய 5 பந்துவீச்சாளர்கள் – லிஸ்ட் இதோ

IND Bowlers

இந்திய கிரிக்கெட் அணி பேட்ஸ்மேன்களுக்கு பெயர் போனது. சச்சின் டெண்டுல்கர், சுனில் கவாஸ்கர், விராட் கோலி, ரோகித் சர்மா, மகேந்திரசிங் தோனி, வீரேந்திர சேவாக் ,ராகுல் டிராவிட் என எண்ணற்ற பேட்ஸ்மேன்கள் இந்தியாவில் இருந்து உருவாகி உள்ளனர். இந்நிலையில் அதனையும் தாண்டி மிகச் சிறந்த பந்து வீச்சாளர்களும் இந்தியாவிற்காக விளையாடியுள்ளனர். அப்படிப்பட்ட 5 பந்துவீச்சாளர்கள் தற்போது பார்ப்போம்.

Zaheer-Khan

ஜாஹிர் கான் :

கங்குலியின் தலைமையில் அறிமுகமானவர். இவர் இந்தியாவிற்கு கிடைத்த முதல் இடது கை வேகப்பந்து வீச்சாளர் இவர். 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி இந்தியா வெற்றி பெற காரணமாக இருந்தவர். 309 சர்வதேச போட்டிகளில் இந்திய அணிக்காக ஆடி 610 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

Srinath 1

ஜவகல் ஸ்ரீநாத் :

- Advertisement -

நமது தந்தையை எல்லாம் கேட்டால் கண்டிப்பாக இவரது பெயரைச் சொல்வார்கள். அவரது காலகட்டத்தில் மிக அசால்டாக 150 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் பந்துவீசியவர். இந்தியாவிற்காக 296 சர்வதேச போட்டிகளில் ஆடி 651 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

ishanth

இஷாந்த் ஷர்மா :

இந்திய அணிக்காக கடந்த 13 வருடங்களாக விளையாடி வருகிறார். சம காலாத்தில் உள்ள மிகச் சிறந்த வேகப்பந்து வீச்சாளர் இவர். தற்போது வரை இந்திய அணிக்காக 191 சர்வதேச போட்டிகளில் விளையாடி 420 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

Shami

முகமது ஷமி :

சமகாலத்தில் உள்ள தலைசிறந்த பந்து வீச்சாளர்களில் இவரும் ஒருவர் தொடர்ச்சியாக 140 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் பந்து வீசுவதில் வல்லவர். அதிலும் கடந்த இரண்டு வருடங்களாக அனைத்து விதமான போட்டிகளிலும் பட்டையை கிளப்பி வருகிறார் முகமது ஷமி. தற்போதுவரை இந்திய அணிக்காக 138 சர்வதேச போட்டிகளில் விளையாடி 336 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

Bumrah-2

ஜஸ்பிரித் பும்ரா :

தற்போது உலகின் மிகச்சிறந்த வேகப்பந்துவீச்சாளர் என்று பாராட்டப்படுபவர். மும்பை இந்தியன்ஸ் அணி கண்டெடுத்த இந்தியாவின் முத்து. டெஸ்ட், டி20, ஒருநாள் என அனைத்து போட்டிகளிலும் பட்டையைக் கிளப்ப கூடியவர் .இந்தியாவின் மிகச் சிறந்த வேகப்பந்து வீச்சாளர் இவர் என்று கூறுவதில் எந்த ஐயமும் தேவையில்லை. தற்போது வரை 128 சர்வதேச போட்டிகளில் இந்தியாவிற்காக ஆடி 232 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.